Wednesday, October 7, 2009

புதிய தலைமுறை = மாலன்- யுவகிருஷ்ணா-அதிஷா


ஆசிரியர் மாலன் அவர்களுக்கு வாழ்ததுக்கள்

தங்களின் புதிய தலைமுறை வார இதழின் முதல் இதழ் கண்டேன். புதியதாய் பள்ளிக்கூடம் வந்த பருவப் பெண்களைப் போல பளிச்சென்றிருந்தது. வண்ணமும், வனப்பும் அருமை. ஒவ்வொரு கட்டுரையிலும் ஆய்வும், தகவலும் பயன் உள்ளவை. நாடாளுமன்றத்தில் இளைஞர்களுக்கு வேண்டும் இடஒதுக்கீடு என்ற முகப்பு கட்டுரை படித்த போது சில நெருடல்கள் ஏற்பட்டன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.



இளைஞர்களுக்கு வாய்ப்பு வேண்டும் என்கிறீர்கள் வரவேற்போம். 18வயது இளைஞனுக்கு வாக்குரிமை கொடுப்பட்டதை கொண்டு 20 வயதில் உறுப்பினராகும் வாய்ப்பு வேண்டும் என்கிறீர்கள். நியதிப்படி உங்கள் வாதம் நியாயமானது என்றாலும் சூழ்நிலைகளையும். விளைவுகளையும் நீங்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். இன்றைய இளைய தலைமுறை என்ன செய்து கொண்டிருக்கிறது. நாலாந்தர நடிகர்களின் விசிறிகளாக இருக்கின்றனர். எதையும் பற்ற வைத்தூப பார்ப்பதில் அலதி ஆர்வம் காட்டுகின்றனர். சாதிப் பிரச்சினை, மதச் சண்டை என்றால் பள்ளிகூடம், பொது சொத்து என்றும் பாராமல் அடித்து நொறுக்கும் மனோபாவம் உள்ளது. உதாரணம், சட்ட கல்லூரி வாளகத்திலே நடந்த சம்பவம். மேலும் பல ஊர்களில் மாணவர்கள் கும்பல் சேர்ந்து கொண்டு அடியாட்கள் போல இயங்கி வரும் சம்பவங்கங்கள் நடக்கின்றன. எதற்கும் எளிதில் உணர்ச்சி வசப் படக் கூடியவர்களாக உள்ளவர்களை, நாடாளுமன்றத்துக்கு உள்ளே அனுமதித்தால் என்னவாகும்.எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் நிலையில் சிறுபிரச்சினை என்றாலும், கருத்து மோதல் வந்தாலும் சபாநாயகரின் மண்டையை உடைப்பார்கள். பிரதமரின் கையை முறிப்பார்கள். பெண்களுக்கு வேறு 50 சதவீத இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்றும் குரல் ஒலிக்கின்றன. அவர்களும் இளையவர்களாக இருக்கும் பட்சத்தில் பா­லியல் தொந்தரவுகளும், அசிங்கங்களும் நாடாளுமன்றத்திற்குள்ளேயே நடக்கும். அங்கீகாரமற்ற கருவுறுத்தல்கள் நடக்கலாம். ஒரு நீதி விசாரணையில், சம்பவம் எங்கே வைத்து நடந்தது என்ற வினாவுக்கு, நாடாளுமன்றத்தில் தான், யாரும் இல்லாத சந்தர்ப்பத்தில், பிரதமர் அலுவலகத்திலேயே நடந்ததாக கூறலாம். ஏனென்றால் இன்றைய இளைய சமுதாயத்துக்கு பாலி­யல் தேவை வந்து விட்டால் எந்த இடமும் புனிதமாகவோ, தவிர்க்க வேண்டியதாகவோ தெரிவதில்லை. கல்வி நிலையங்களையும், பணிகூடங்களையும் கூட பயன்படுத்தி கொள்கிறவர்களுக்ளு, நாடாளுமன்றம் மட்டும் எப்படி புனிதமாகிவிடும்.


சிக்ஸர் அடித்தால் கைதட்டுவது, விக்கேட் அடித்தால் விசில் அடிப்பது என்று எதிரியை கோமாளியாக எண்ணி மகிழ்ந்து வருகிறது நம் இளைய சமூகம். அது அப்படி இருக்கத்தான் ஆசைப்படுகிறோம். ஒரு பதற்றமான சந்தர்ப்பத்தில் பேச்சுவார்த்தைகளைவிட போருக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அணு ஆயுதங்களை வைத்திருக்கும் இரு தேசங்களின் இறுதி வாய்ப்பாக அணு ஆயுதங்கள் பயன்படும் நெருக்கடியை அந்த ஆதரவு வாக்குகள் அளித்து விடும் அபாயம் உண்டு. இந்த இளைய சமுதாயம் தீர்மானம் நிறைவேற்ம் இடத்திற்கெல்லாம் சென்றால் என்னவாகும் என்று நீங்கள் சிந்திக்க வில்லையா?