Saturday, May 9, 2009

இஸ்லாமிய தலைவர்களின் அரசியல் நகைச்சுவை சித்திரங்கள்

பிரபல (!) முஸ்லிம் தலைவர்களின் சமீபகாலத்திய அரசியல் அனுசரனைகள் இங்கே நகைச்சுவை சித்திரங்களா...

டி.என்.டி.ஜே நிர்வாகிகள் கலைஞரை சந்தித்த போது...
தயாநிதிமாறனுடன் மேலைநாசர்
 (இவர் எந்த இயக்கத்தில் இருக்கிறார் என்று யாராவது பின்னுட்டம் அனுப்பினால் நல்லது)பிரபல வலைபதிவர் முகவை தமிழனுடன் நடிகர் ரித்திஷ்

ஐ.என்.டி.ஜே தலைவர் பாக்கர் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது....

Friday, May 8, 2009

அரசியல் கட்சி துவங்கி லாபகரமாக நடத்துவது எப்படி? டிப்ஸ்.. டிப்ஸ்..


இன்றைய தினத்தில் மிகவும் லாபகரமான தொழில் என்றால் அரசியல் நடத்துவதுதான் என்பதை சிறு குழந்தை கூட சொல்லிவிடும். அப்படிப் பட்ட லாபரமானத் தொழிலை நடத்துவதற்கு ஏதோ என்னால் ஆன டிப்ஸ்.


முதற்கட்டமாக கட்சிக்கு பெயர் வைத்தே தீர வேண்டும். அதில் முன்னேற்ற, தேசிய, கழக என்ற வார்த்தை கண்டிப்பாக இருக்க வேண்டும்.


கட்சின்னு இருந்தால் கொடி வேண்டுமே. கவலையை விடுங்கள் உலகம் நாடுகளின் கொடியில் தங்களுக்கு எது பிடித்திருக்கிறதோ அதனையே உங்கள் கொடியாக சொல்லிவிடுங்கள். உதாரணத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற கட்சி (பி.ஜே) துபாய் நாட்டின் கொடியைவே தனது அமைப்பின் கொடியாக வைத்துள்ளது.


அப்புறம் கட்சி ஆரம்பித்து விட்டால் மக்களுக்கு சொல்ல வேண்டாமா. உடனே பத்திரிக்கையாளர்களை வசமாக கவனித்து ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திடல் வேண்டும். முடிந்தால் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஷு எரியச் சொன்னால் உடனே பிரபலம் ஆகி விடும்.


முடிந்தால் தினமும் பத்திரிக்கை அறிக்கை விட வேண்டும். பத்திரிக்கை அறிக்கை விடும் பொழுது 99 சதவீதம் ஆளும் கட்சியை ஆதரித்தே விட வேண்டும். இல்லையென்றால் வீட்டிற்கு ஆட்டோ வரும் தலைவரே.


கட்சின்னு ஆரம்பித்தாச்சு அதற்கு ஒரு வெப்சைட் இல்லாமலா. வெறும் வெப்சைட்டை மட்டுமே வைத்துக் கொண்டு கட்சி நடத்துவது பற்றி தோழர். முகவைத் தமிழன் மற்றும் நடிகர் விஜய டி.ராஜேந்தரை தொடர்பு கொண்டால் கூடுதல் டிப்ஸ் கிடைக்கும்.சரி அரசியல் நடத்துவதற்கு ஏதாவது போராட்டம் நடத்த வேண்டுமே. இல்லையென்றால் அரசியல் எதிர்காலம் என்ன ஆவது. ஆகவே உடனே ஏதாவது காரணத்தை சொல்லி போராட்டம் நடத்தலாம். போராட்டத்திற்கு கண்டிப்பாக பத்திரிக்கையாளர்கள், போலிசார்கள் போக குறைந்தது 20 பேராவது இருப்பது நலம். காரணம் கேட்டால் வங்க கடல் வத்திப் போணதற்கு ஆளும்கட்சியும்லிஎதிர்கட்சியும் தான் காரணம் என்று குற்றச்சாட்டுகளை அடுக்குங்கள்.அப்புறம் என்ன கொஞ்சம் கொஞ்சமாக உங்களின் கட்சி அதி பிரபல்யம் அடைந்தவுடன் உங்களை பிரபல தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளில் அடிக்கடி நேர்காணல்களில் இடம் பெறவீர்கள். தேர்தல் வந்தால் உங்களுக்கு பிடித்த கட்சியில் சீட் கேளுங்கள். தர மாட்டார்கள். கண்டிப்பாக இதயத்தில் இடம் இருப்பதாக கூறுவார்கள். ஆகவே தனித்து நில்லுங்கள்.

Thursday, May 7, 2009

தனுஷ்கோடியில் ஏன் வலை பதிவர் சந்திப்பை நடத்த வேண்டும்?தனுஸ்கோடி ஒரு அழிந்த பூமி. ராமேஸ்வரம் தீவின் வால் பகுதி. இன்று தனுஸ்கோடியின் பெயர் அதிகம் ஊடகங்களில் தென்படுகின்றது என்றால் அதற்கு காரணம் நிச்சயமாக இலங்கையில் இருந்து தாயகம் திரும்பும் தமிழர்களை வரவேற்பதே இந்த புதைந்த பூமிதான்.
சரி தலைப்பிற்கு வருகிறேன். தமிழ் கூறும் நல்லுகின் வலைப் பதிவர்கள் பல்வேறு இடங்களில் கூடி வலை பதிவர் சந்திப்பு என்று கும்மியடித்திருக்கலாம். ஆனால் ஒரு போராட்டமாக ஏன் வலை பதிவர்களின் சந்திப்பை தனுஷ்கோடியில் நடத்தக் கூடாது?சந்திப்பின் முக்கிய நோக்கமே இலங்கை தமிழர் பாதுகாப்பு. (தனுஷ்கோடி தான் இலங்கைக்கு மிக அருகில் இருக்கக் கூடிய தேசம்.. இராமேஸ்வரத்தில் சினிமா உலகத்தினர் நடத்தியப் பேராட்டம் கவனத்திற்குரியது)
சரி இதனை ஏன் வலைபதிவர் நடத்த வேண்டும் என்றுக் கேட்டால் '' நாம் வெறுமனே வலைப் பூக்களில் எழுதிக் கொண்டே இருப்பதைக் காட்டிலும் இது களத்தில் இறங்கிப் போராடுவதற்கு சமம்.
சரி நான் ஆரம்பித்து வைத்திருக்கிறேன். இதனைப் பற்றி நீங்களும் இடுக்கைகளை இட்டு கருத்துக்களைப் பரப்புங்கள்.

Wednesday, May 6, 2009

டைம்ஸ் ஆஃப் இந்தியா பாராட்டும் ஒரு அரசியல் கட்சி தொண்டர்கள்

அரசியல் கட்சியினரின் பொதுக்கூட்டம், மாநாடுகளில் எல்லாம் எவ்வளவு அநாகரீகமாக அதன் தொண்டர்கள் நடந்து கொள்வார்கள் என்பதை பொதுமக்கள் நன்கு அறிவர். மனிதநேய மக்கள் கட்சி தனது தொண்டர்களை கண்ணியமிக்க இளைஞர்களாக உருவாக்கி வைத்திருக்கிறது. கடந்த காலங்களில் தமுமுக நடத்தும் பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், ஆர்ப்பாட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகளில் பாதுகாப்புக்கு வரும் காவல்துறையினர், தொண்டர்களின் ஒழுங்கு பற்றிப் பாராட்டிப் பேசியுள்ளனர்.

தற்போது அரசியல் கட்சியாக பரிணாமம் அடைந்த சூழ்நிலையிலும் இதன் தொண்டர் படை நாகரீகம் இழக்கவில்லை. இதனை பொதுமக்கள் கண்டு வருகின்றனர். இந்தியாவின் முதல்தரமான பத்திரிகைகளில் ஒன்றான டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளேடு இதனை சுட்டிக் காட்டியுள்ளது.மத்திய சென்னை ம.ம.க. வேட்பாளர் செ. ஹைதர் அ­ அவர்களின் வாக்கு சேகரிப்பு அணிவகுப்பை சுட்டிக்காட்டி எழுதியுள்ள டைம்ஸ் ஆப் இந்தியா (1.5.2009), ''மனிதநேய மக்கள் கட்சித் தொண்டர்கள் மிகவும் நாகரீகமான முறையில் பேரணியாகச் சென்றனர்'' என்று எழுதியுள்ளது.

மயிலாடுதுறை தொகுதியின் அவலங்கள் உங்கள் ஓட்டு யாருக்கு?

Tuesday, May 5, 2009

தென்காசியில் முந்துகிறார் கிருஷ்ணசாமி


புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமி தென்காசி பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். தென்காசி பாராளுமன்றத் தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு 1 லட்சம் வாக்கு களுக்கு மேல் டாக்டர் கிருஷ்ணசாமி பெற்றது குறிப்பிடத்தக்கது.


ஒன்றரை லட்சம் முஸ்லிம் வாக்குகள் நிரம்பியிருக்கும் தென்காசி தொகுதியில் ம.ம.க. வலுவான ஒரு கட்சியாக உள்ளது. தமுமுக வலுவான சமுதாய அமைப்பாகவும், அனைத்துத் தரப்பு மக்களிடமும் ஆதரவு பெற்ற அமைப்பாகவும் உள்ளது குறிப்பிடத் தக்கது. டாக்டர் கிருஷ்ணசாமியை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் தமுமுக, மமக நிர்வாகிகளும் தொண்டர்களும் பம்பர மாக பணியாற்றி வருகின்றனர்.


தென்காசி பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் மமக மற்றும் தமுமுகவினர் தீவிரப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை ம.ம.க. மாவட்டச் செயலாளர் பாளை ரபீக், பொருளாளர் செய்யது அலி தலைமையில் தொகுதி முழுவதும் பிரச்சாரப் பணிகள் முடுக்கிவிடப் பட்டுள்ளன. ஜமாஅத் சந்திப்பு, முக்கியப் பிரமுகர்கள் சந்திப்புகள் நடந்து வருகின்றன. ம.ம.க.வின் நிலைப்பாட்டை ஜமாஅத் தார்களும், சமுதாயப் பிரமுகர்களும் வரவேற்று புதிய தமிழகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.


எதிர் அணிகளான காங்கிரஸ் சார்பில் வெள்ளபாண்டி போட்டியிடுகிறார். கடந்த தேர்தல் தவிர 30 ஆண்டு காலமாக காங்கிரஸ்தான் இத்தொகுதியில் வெற்றிபெற்று வந்துள்ளது. ஆனால் தொகுதியின் முன்னேற் றத்திற்கு காங்கிரஸ் கட்சி எதுவுமே செய்யவில்லை. இத்தனைக்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆறு முறை வென்ற அருணாச்சலம் தொழில் துறை மந்திரியாக வேறு இருந்திருக்கிறார். எனினும் தொழிற்சாலைகளோ வேறு உருப்படியான திட்டங்களையோ கொண்டு வராததால் காங்கிரஸ் மீது கடும் வெறுப்பில்தான் கடந்தமுறை சி.பி.ஐ. வேட்பாளர் அப்பாதுரையை வெற்றி பெற வைத்தனர் தென்காசி தொகுதி மக்கள். மேலும் வெள்ள பாண்டி தொகுதியில் பெரிய அளவு அறிமுகம் இல்லாதவர். கொடி கட்டக்கூட ஆள் இல்லாத காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் பலத்தைத் தான் நம்பியிருக்கிறது. ஆனால் வாசன் ஆதரவாளரான வெள்ள பாண்டிக்கு கூட்டணிக் கட்சிகளும் பெரிய அள வில் ஒத்துழைப்பு தருவதாக தெரிய வில்லை.


இந்தியக் கம்யூனிஸ்ட் வேட்பாளர் லிங்கம் பெரிய அளவில் தொகுதிக்கு அறிமுகம் இல்லாதவர். கூட்டணி பலமாக இருந்தாலும் கடந்த முறை வெற்றி பெற்ற சி.பி.ஐ. வேட்பாளர் அப்பாத்துரை 5 வருடமாக தொகுதியை எட்டிப்பார்க்காததாலும் உருப்படியான பணிகள் ஏதும் செய்யாததாலும் கடுப்பில் இருக்கும் மக்கள் ­ங்கத் துக்கு ஓட்டளிக்க விரும்ப மாட்டார்கள்.


டாக்டர் கிருஷ்ணசாமியைப் பொறுத்தவரை தாழ்த்தப்பட்ட மக்களின் பெரும் ஆதரவு உள்ளதுடன் ம.ம.க. வினரின் ஆதரவும் சேர்ந்துள்ளதால் வெற்றி பெறுவது நிச்சயம். முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் தமுமுகவின் செயல்பாடுகளால் கவரப் பட்ட நடுநிலை வாக்குகள் கிருஷ்ண சாமியை கரையேற்றி விடும் என்பதே தென்காசியின் தற்போதைய கள நிலவரம்.

சுட்டி டி,வியில் தமிழ் பேசும் லக்கி லுக்
லயன் காமிக்ஸ் படிக்கும் நண்பர்களுக்கு நன்கு அறிமுகமான நகைச்சுவை கதாபாத்திரம் லக்கி லுக். இப்போழுது லக்கி லுக். சுட்டி டி,வியில் தினமும் பகல் 1.30 முதல் 2.00 மணிவரையிலும் கார்டுன் நாடகமாக தமிழ் பேசி சுட்டிகளை மகிழ்த்து வருகிறார் லக்கி லுக்.சுட்டியில் லக்கி லுக்கை பார்க்கும் பொழுது ஏனோ காமிக்ஸில் படித்த சுவாரஸ்யம் இல்லாமல் இருப்பது போல் தோன்றுகிறது. இதனை அதிக பட்சமாக 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு புரியும் அளிவில் மொழி மாற்றி தமிழ் பேச வைத்திருக்கிறார்கள் லக்கியை, இவர்களுக்கு எல்லாம் பழைய லக்கி லுக்கின் லயன் காமிக்ஸ்களை படித்து பயிற்சி எடுக்கலாம்.இனி டோராவை புறம் தள்ளிவிட்டு சுட்டிகளை லக்கி லுக் கவர்வான் என்று நம்புகிறேன். இனிமேல் பர்மா பஜாரில் பதினைந்து ரூபாய்க்கு லக்கி லுக்கின் தமிழ் கார்டூன் தொடர்களை கூவி, கூவி விற்பார்கள் என்றும் நம்புகிறேன். வலை பதிவு நண்பர்கள் சுட்டி டி.வியில் இருந்து காப்பி செய்து தங்களது வலைப் பதிவிலும் இடுக்கைகளை இடுவார்கள். எது எப்படியோ சுட்டி டி.வியின் மூலம் அதிகமதிகமான ரசிகர்கள் லக்கி லுக்கிற்கு கிடைப்பான்.

Monday, May 4, 2009

தமிழனுக்கு வா‌க்கு : சீமான் ஆவேச பேச்சு


சிறையிலிருந்து விடுதலையான இயக்குனர் சீமான், கடந்த மே 2 ம் தேதியன்று நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்Add Videoது கொண்டார்.சிறை மீண்டபின் சீமான், ஈழம் குறித்த தனது கருத்தை விரிவாகப் பதிவு செய்த முதல் மேடை அது.அவரது வீர உரையின் சாராம்சம் வருமாறு :"


நான் அதிகமாக உணர்ச்சி வசப்படுவதாக சொல்கிறார்கள்.உணர்ச்சி இருக்கு, வசப்படுகிறேன். பிரபாகரனும், புலிகளும் அழிந்தால் ஈழப் போராட்டம் என்னாகும்னு ஒரு இளம் பத்திரிக்கை நிருபர் என்னிடம் கேட்டார். யார் புலி? ஈழத்தின் என்னுடைய தாய், என்னுடைய சகோதரன், என்னுடைய சகோதரி, குழந்தைகள் அநியாயமாக கொல்லப்படுகிறார்களே...என்று உணர்ச்சிகொள்கிற ஒவ்வொருவனும் புலிதான்! கிளிநொச்சியில் ஒரு தமிழ் ஈழக்கொடியை இறக்கினான்...உலகம் முழுவதும் ஓராயிரம் ஈழ தேசியக்கொடி உயர்ந்தது.புலிகள் எங்கிருக்கிறார்கள் என்பது இப்போது புரிந்தது.


இறையாண்மை, தேசிய பாதுகாப்பு சட்டம்னு புதுபுதுசா சொல்றாங்க.எனக்கு இறைவனும் கிடையாது, அதனால இறையாண்மையும் கிடையாது.என்னை ஏன் கைது பண்ணினாங்க? நான் பிரபாகரனை என் சொந்த அண்ணன்னு சொன்னேனாம். நான் கேட்கிறேன்... எங்கோ இத்தாலியி‌ல் பிறந்த ஒருவர் இந்தியாவுக்கே அன்னையாக இருக்கும்போது என் ரத்தம் என் சொந்த ரத்தம் எனக்கு அண்ணனாக இருக்கக் கூடாதா?இலங்கை வேறொரு நாடு, அங்குள்ள பிரச்சனையில் தலையிட முடியாதுன்னு சொல்றியே... இதை முதல்ல ராஜீவ் காந்தியிடம் சொல்லியிருக்க வேண்டும். இலங்கைக்கு முதலில் அமைதிப்படையை அனுப்பியதே அவர்தானே! பாகிஸ்தானைப் பிரித்து பங்களாதேஷுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது யார்? பங்காளாதேஷை மீண்டும் பாகிஸ்தானுடன் ஒன்றிணைக்க முடியுமா... அப்படி இணைத்தால் நாங்களும் தமிழ் ஈழம் கேட்பதை நிறுத்திக் கொள்கிறோம்.ஈழத்தில் கந்தக நெருப்பில் தமிழன் சாவதற்கு அனைத்து உதவிகளையும் செய்‌கிறது காங்கிரஸ் கட்சி. முத்துக்குமார் யாரு... பாரதிராஜா யாரு என்றா கேட்கிற...? யார்னு காட்டுறோம். நான் செத்தாவது உங்களை (காங்கிரஸை) தோற்கடிப்பேன். அருமை தமிழனமே... இதுவரை சாதிக்காக ஓட்டு போட்டோம், மதத்துக்காக ஓட்டு போட்டோம், கட்சிக்காக ஓட்டு போட்டோம். இந்த ஒரேயொரு முறை தமிழனுக்காக ஓட்டுப் போடுவோம்.காங்கிரஸை தோற்கடிப்போம். தமிழன் தன்மானத்தை இழக்கவில்லை என்பதை காங்கிரசுக்கு புரிய வைப்போம்! "Sunday, May 3, 2009

தயாநிதி வெற்றிக்கு அ.தி.மு.க உதவுகிறது தமுமுக தலைவர் அதிரடிப் பேட்டி


தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ள மனிதநேய மக்கள் கட்சி, தேர்தலில் போட்டியிடுகிறது. மத்திய சென்னையில் ஹைதர் அலி. மயிலாடுதுறையில் ஜவாஹிருல்லாஹ் என்று அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் களத்தில் நிற்கின்றனர். இந்நிலையில் நாம் மனிதநேய மக்கள் கட்சித் த்லைவரும், மயிலாடுதுறை வேட்பாளருமான ஜவாஹிருல்லாஹ்வை ஓட்டு வேட்டையின் போது தமிழன் எக்ஸ்பிரஸுக்காகச் சந்தித்தோம். இதோ அவரது சிறப்புப் பேட்டி.


?. அரசியலுக்குப் போகமாட்டோம் என ஆரம்பத்தில் சொன்ன தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இப்போது அரசியல் கட்சியாக அவதாரம் எடுத்து தேர்தலில் குதித்துள்ளதே?


1995ல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டது. 1996 சட்டமன்றத் தேர்தல் முதல், தொடர்ந்து பெரும்பாலும் தி.மு.க கூட்டணியையே ஆதரித்துள்ளோம். அதே நேரத்தில் தேர்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலும் (வேட்பாளர்களை நிறுத்துவதைத் தவிர) ஈடுபட்டுள்ளோம்.சுற்றுச்சூழல் பாதிப்பு, மனித உரிமை மீறல், உலக மயமாக்கலின் வீபரீதம் தொடர்பான மக்கள் பிரச்சினைகளை அரசியல் களத்தில் யாரும் பேசுவது இல்லை என்பது யாதர்த்த உண்மை. இன்றைக்கு அரசியல் என்பது வணிக மயமாக்கப்பட்டுள்ளது. தேர்தலில் செய்யக் கூடிய முதலீட்டை வெற்றி பெற்ற பிறகு அறுவடை செய்ய வேண்டும் என்பது தான் சராசரி அரசியல்வாதியின் மனப்போக்காக உள்ளது. இந்நிலையை மாற்றி தூய்மையான அரசியலில் உண்மையான மக்கள் சேவகர்களாகச் செயல்படவே நாங்கள் அரசியலுக்கு வந்தோம்.


?. ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையின் மீது மத்திய அரசு என்ன எடுத்திருக்கிறது?


2004 நாடாளுமன்றத் தேர்தலில் அறிக்கையில் காங்கிரஸ், தி.மு.க கட்சிகள், 'முஸ்லிம்களுக்கு கல்வி வேலை வாய்ப்பில் அகில இந்திய அளவில் இடஒதுக்கீடு அளிக்கப்படும்' என்று கூறினார்கள். நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் சிறுபான்மை மக்களுக்கு இந்திய அளவில் 15 சதவீத இடஒதுக்கீடு எனவும், அதில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு எனவும் பரிந்துûரை செய்துள்ளது. இந்த அறிக்கை 22.05.2007ல் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அளிக்கப்பட்டது. ஆனால் இந்த அறிக்கை பற்றி நாடாளுமன்றத்தில் விவாதத்திற்குவிட காங்கிரஸ் தலைமயிலான அரசு தவறிவிட்டது. பலமுறை நாங்கள் கேட்டும், மத்திய அரசை இந்த விஷயத்திற்கு தி.மு.கவும் நிர்பந்திக்க மறுத்து விட்டது. ஆகவே வரும் தேர்தலில் தி.மு.க காங்கிரஸ் கூட்டணிக்கு நல்ல பாடம் கிடைக்கும்.


?. பாபர் மசூதி இடிப்பு பிரச்சினையில் காங்கிரஸுக்கு சம்பந்தம் உள்ளது என லாலு பிரசாத் யாதவ் இப்போது கூறியுள்ளாரே?


பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது பிரதமராக இருந்த நரசிம்மராவ் அன்று தொலைக்காட்சியில் உரையாற்றியபோது, 'இடித்த பள்ளிவாசல் அதே இடத்தில் கட்டித் தரப்படும்' என்று வாக்குறுதி இன்றுவரை நிறைவேற்றித் தரப்படவில்லை. பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக நீதிபதி எம்.எஸ். லிபர்கான் தலைமையில் ஒரு ஆணையம் அமைத்து, 16 ஆண்டுகள் விசாரணை மேற்கொள்ளப் பட்டுள்ளது. அந்த ஆணையத்தின் பணி முடிந்த பின்னும், விசாரணை அறிக்கை வெளியிடக் கூட காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு அக்கறை இல்லை. அந்த துரோக செயலைத்தான் இப்போது லாலு பிரசாத் தோலுரித்துக் காட்டியுள்ளார்.


?. தி.மு.க., அ.தி.மு.க., கட்சி வேட்பாளர்களில் முஸ்லிம்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதா?


தி.மு.கவும், அ.தி.மு.கவும் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே மாதிரியாகவே நடக்கின்றன. 21 வேட்பாளர்கள் இடம்பெற்ற தி.மு.கவின் வேட்பாளர் பட்டியலில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை. தி.மு.க அணியில் இடம் பெற்ற முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், வேலூர் தொகுதியில் ஏணிச் சின்னத்தில் போட்டியிடப் போவதாகச் சொன்னார். ஆனால் சில நாட்களில் தி.மு.கவின் சின்னம் ஆனது. அ.தி.மு.கவின் 23 வேட்பாளர்களில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை. சென்னையில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் த.மு.மு.க பொதுச் செயலாளர் ஹைதர் அலி போட்டியிடுவார் என்று அறிவித்தவுடன், தயாநிதி மாறனுக்கு உதவி செய்ய ஒரு முஸ்லிம் வேட்பாளரை அறிவித்துள்ளது அக்கட்சி. இதெல்லாம் எங்களுக்கு தேர்தலின் தொடக்கத்தில் கிடைத்த ஒரு வெற்றிதான்.


?. இந்திய அளவில் முஸ்லிம் மற்றும் சிறுபான்மையினர் எழுச்சி எப்படி உள்ளது?


காங்கிரஸிற்கு எதிர்ப்பு உள்ள அஸ்ஸாம், மேற்கு வங்காளம், பீஹார், ராஜஸ்தான், உத்திர பிரதேசம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் 'ஐக்கிய ஜனநாய முன்னணி' என்று கூட்டணி அமைத்து காங்கிரஸை எதிர்த்துக் களம் கண்டுள்ளார்கள். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியரசு முஸ்லிம் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராகச் செயல்பட்டது என்ற கோபம் இம்மக்களிடம் பொதுவாக நிலவுகிறது. உதாரணமாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் குறைந்த பட்ச செயல்திட்டதில், 'பாலஸ்தீன மக்களை அன்றாடம் கொன்று குவித்து வரும் இஸ்ரேலுடன் உறவைப் பலப்டுத்தி, இஸ்ரேலின் உளவு செயற்கைக் கோளான டெஸ்காரை ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து இந்தியா ஏவி உள்ளது. இது போன்ற பல செயல்பாடுகளைச் சொல்லாம்.2004 தேர்தல் அறிக்கையில் கொடுத்த, தலித் கிறிஸ்தவர்களுக்கு இடஒதுக்கீடு தருவோம்' என்ற உறுதியை ஐந்து ஆண்டுகால ஆட்சியில் நிறைவேற்றத் தவறியது காங்கிரஸ். அதுமட்டுமின்றி 2009 தேர்தல் அறிக்கையில் கூட தலித் கிறிஸ்தவர்கள் இட ஒதுக்கீடு தொடர்பாக ஒருவரிகூட இல்லை. எனவே முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மை மக்கள் காங்கிரஸுக்கு எதிரன சூழலிலேயே உள்ளனர்.


?. ''மகாமகத் திருவிழாவ தேசியத் திருவிழாவாக அறிவிப்பீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டபோது மணிசங்கர் ஐயர், ''நான் நாஸ்திகன், என்னிடம் யாரும் இக்கோரிக்கையை வைக்கவில்லை'' என்றார். மயிலாடுதுறை தொகுதியில் நீங்கள் தேர்வானால் இந்துக்களின் இந்தக் கோரிக்கையை ஏற்பீர்களா?


காங்கிரஸ் சார்பாகப் போட்டியிடும் மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயர், மயிலாடுதுறையை துபாய் ஆக்குவேன்' என்றார். ஆனால் அவர் மூன்று முறை வெற்றி வெற்றும் எதுவும் செய்யவில்லை. இறால் பண்ணைகளைக் கொண்டு வந்து விவசாயத்தைப் பாழடித்தார். அகல ரயில் பாதை திட்டத்தை முடித்தாரா என்றால் அதையும் செய்யவில்ல. கொள்ளிடம் ஆற்று அணக்கரை பாலம் சிதிலமடைந்து, சென்னை செல்லும் மக்கள் ஊரைச் சுற்றி கூடுதல் செலவில் செல்ல வேண்டியுள்ளது. அந்தப் பாலத்தைப் பற்றியாவது கவலைப் பட்டாரா என்றால் அதுவும் இல்லை. இப்படிப்பட்ட பல பிரச்சினைகளுக்கு இடையே நான் தேர்வு ஆனால், அனைத்து தரப்பு மக்களுக்க்கும் பயன்படக் கூடியலிஅனைவரின் அபிலாஷைகளையும் பூர்த்தி செய்யக் கூடிய பணிகளில் அதிக அக்கறை செலுத்துவேன்.


நன்றி தமிழன் எக்ஸிபிரஸ் 07.05.2009