Thursday, January 13, 2011

எலந்தகுடியிலும் விடுதலை சிறுத்தைகளின் அராஜகம்

ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் விழிப்புணர்வுக்காக முஸ்லிம் சமுதாயம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

ஆனால் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் அரசியல் அரங்கில் மேன்மை பெறவேண்டும் என லட்சியத்துடன் செயல் பட்டுவரும் அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படும் வண்ணம் தமிழகத்தில் பல இடங்களில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருகின்றன். கடந்த பதிவில் இதுகுறித்து ஓர் செய்தி வெளியிடப்பட்டது. இப்போது நாகை மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் எலந்தகுடி கிராமத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் தொடர்ந்து அராஜகம்செய்து வரும் தகவல்கள் நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

விடுதலை சிறுத்தை அமைப்பினர் திட்டமிட்டு எலந்தகுடி கிராமத்தில் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தி வருகின்றனர்.

வெளியூரில் இருந்து திருமணத்திற்காக வந்த முஸ்லிம்களை வேண்டுமென்றே விடுதலை சிறுத்தை கட்சியினர் வம்புக்கிழுத்து தாக்குதல் தொடுத்துள்ளனர். விருந்தாளிகளாக வந்த வெளியூர் முஸ்லிம்களை தாக்கியதை தட்டிக் கேட்ட எலந்தகுடி முஸ்லிம் மக்களை ஆட்டோ ஓட்டுனர்கள் என்ற போர்வையில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பள்ளிவாசலுக்குச் சொந்தமான குளமான மவ்லா குட்டைகுளத்தில் இறங்கி சட்ட விரோதமாக மீன் பிடிக்கவும் முயன்று வருகின் றனர்.

எலந்தகுடி ஹாஜியார் தெருவில் அந்த அமைப்பின் ரவுடிகள் புகுந்து சகாபுதீன், சபீக் அகமது என்ற இரண்டு இளைஞர்களையும் வீடு புகுந்து தாக்கியுள்ளனர்.
ஜின்னாதெருவில் நள்ளிரவு நேரத்தில் பயங்கர ஆயுதங்களுடன் முஸ்லிம் இளைஞர்களை கொடூரமாகத் தாக்கி வருவதும் தொடர்கதையாகி வருகிறது. இது குறித்து காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தால் கூட காவல்துறையினர் சரியான நடவடிக்கை எடுப்பதில்லை. அத்தோடு புகார் அளித்தவரை யும் தாக்குதலுக்கு ஆளானவர்களையும் பொய் வழக்கு போட்டு காவல்துறையினர் கொடுமை படுத்தும் போக்கும் தொடர்தாக அவ்வூர் மக்கள் குமுறுகின்றனர்.

நள்ளிரவு நேரத்தில் காரணம் எதுவுமின்றி குறிப்பிட்ட அமைப்பை சேர்ந்தவர்கள் இரு சக்கர வாகனத்தில் கூச்சலிட்டுக்கொண்டு முஸ்லிம்கள் வசிக்கும் தெருக்களில் சுற்றுவது தேவையற்ற பதட்ட நிலையை அதிகரித்துள்ளது.

பள்ளிவாசல் தெரு மதகுகளில் அமர்ந்து கொண்டு முஸ்லிம் பெண்களை கிண்டல் செய்து பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக் கியுள்ளனர்.
எலந்தகுடி பகுதிக்கு அருகில் உள்ள அரிவலம் பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் இதுபோன்ற அராஜகங்கள் விளைவித்து சமூக ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் வேலையைத் தொடர்ந்து செய்து வருகின்றனர் என்பது அப்பகுதி மக்களின் குமுறலாகும்.

அப்பகுதி முஸ்லிம்கள் சமூக அமைதிக்கும் ஒற்றுமைக்கும் முன்னுரிமை கொடுக்கும் சமாதானப் பிரியர்கள் என்பதாலே அப்பகுதி அமைதிப் பூங்காவாக உள்ளது.

இதனை காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக கவனத்தில் எடுத்துக்கொள்ளாவிடில் அந்தப்பகுதி பதட்டப் பிரதேசமாகும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக நட வடிக்கை எடுத்து எலந்தகுடி முஸ்லிம் மக்களின் சமாதானசக வாழ்வுக்கு உத்திரவாதம் தர அரசாங்கம் முன் வரவேண்டும்.

இப்பிரச்சனை தொடர்பாக பள்ளி வாசல் நிர்வாகம், தமிழக முதல்வர் தொடங்கி அனைத்து முக்கிய துறை யினருக்கும் முறையீடு செய்தும் நடவடிக்கை துரிதமாக்கப்படவில்லை. பற்றி எரியும் இப்பிரச்சனையை உடனடியாக கவனிக்காமல் தாமதப்படுத்தும் மாநில காவல்துறை செயல் நிச்சயம் கண்டிக்கக்கூடியது.

தலித்துகளின் உற்ற நண்பர்களான முஸ்லிம்களோடு மோதும் விடுதலை சிறுத்தைகள் தங்கள் பழைய நாட்களை எண்ணிப் பார்க்க வேண்டும். தங்கள் வளர்ச்சிக்கு துணையாக இருந்தவர்களை பகைப்பது நியாயம் தானா?

முஸ்லிம்களோடு மோதும் சிறுத்தைகள்-பேரணாம்பட்டில் தகுந்த பாடம்

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நகரத்தில் இஸ்லாமியர்கள் கணிசமான அளவில் வாழ்ந்து வருகிறார்கள். இங்கு முஸ்லிம்களும், தலித்களும் ஒற்று மையோடு வாழ்ந்து வருகிறார்கள், இந்த ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக விடுதலை சிறுத்தை கட்சியின், தமிழ் தேசிய பேரவை, வடக்கு மாவட்ட செயலாளரான வேதாச்சலம் என்பவர் தொடர்ந்து கடந்த 2 வருடங்களாக முஸ்லிம்கள் மீது அராஜகப் போக்கை மேற்கொண்டு வந்தார், குறிப்பாக முஸ்லிம் சமுதாயத்தை இழிவாகப் பேசுவ தும், முஸ்லிம் பெண்களை அநாகரீகமாகப் பேசியும் வந்தார்.

இதன் உச்சக்கட்டமாக 16.12.10 வியாழன் அன்று மாலை 6.30 மணியளவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேரணாம்பட்டு நகராட் சியின் புதிய கட்டட அலுவலகத்தில் நுழைந்த வேதாச்சலம், புதிய கட்டடத் திறப்பு விழாவிற்கு வருகை தரவுள்ள துணை முதல்வர் மு..ஸ்டாலின் நிகழ்ச்சியின் நோட்டீசில் என் பெயர் ஏன் இல்லை? என்று கேட்டவாறே அங்கி ருந்த திமுகவை சேர்ந்த முஸ்லிம் கவுன் சிலரான முன்னா என்பவரைத் தாக்கியது மட்டுமில்லாமல், அங்கிருந்த மற்ற முஸ்லிம் களையும் தன்னுடைய கூட்டாளிகளோடு சேர்ந்து கொலை வெறியோடு தாக்கியுள்ளார், அதன் பின்னர் வெளியில் வந்த வேதாச் சலம் பொது இடத்தில் முஸ்லிம்களை அறுவருப்பான வார்த்தைகளில் திட்டினார். இதனைத் தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் காவல்துறையிடம் முறையிட்ட போது நடவடிக் கை எடுக்காமல் காலம் தாழ்த்தியதால், கோபம டைந்த பொதுமக்கள் நூற்றுக்கணக்கில் ஒன்று திரண்டு சாலையில் வந்து போராடிய போது, சிறு கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது.

உடனடியாக வேதாச்சலத்தை கைது செய்யவில்லை என்றால் 18.12.10 அன்று வருகை தரவுள்ள மு..ஸ்டாலினுக்கு கருப்பு கொடி காட்டும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது, அதன்பின் மாவட்ட கண்காணிப்பாளர் திரு.அன்பு அவர்களை சந்தித்து உடனடியாக வேதாச்சலத்தை கைது செய்ய வலியுறுத்தப்பட்டதுடன், அப்பாவி களை விடுதலை செய்யவும் வலியுறுத் தினர். இதே நேரத்தில் தமுமுக பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி அவர்க ளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரிகளை பொதுச்செயலாளர் அவர்கள் தொடர்பு கொண்டு பேசினார், தொடர்ந்து பொதுச் செயலாளரின் ஆலோசனையை பெற்று மாவட்ட நிர்வாகிகள் செயல்பட்டனர். இதைத் தொடர்ந்து அன்பு அவர்கள் வேதாச் சலத்தை மிக விரைவில் கைது செய்வ தாகவும், அப்பாவிகளை விடுதலை செய்து விடுவதாகவும் வாக்குறுதி அளித்தார்.

இவருடைய வாக்குறுதியை நீண்ட ஆலோசனைக்குப்பின் ஏற்றுக்கொண்ட நிர்வாகிகள், அறிவித்த கறுப்புக் கொடி காட்டும் ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டனர். அதன் பின் கைது செய்யப்பட்ட 8 பேரும் இரவு 1.00 மணிக்கு விடுதலை செய்யப்பட்டனர். ஊரும் அமைதியானது.

தொடர்ந்து தமிழகமெங்கும் விடுதலை சிறுத்தைகள் சமீபகாலமாக முஸ்லிம் பகுதிகளில் அராஜகம் செய்வதும், முஸ்லிம் களையே தாக்குவதும் பெருகி வருகிறது. திருமாவளவனும், வன்னியரசும் தங்கள் கட்சியினரை கட்டுப்படுத்துவார்களா?

Wednesday, June 23, 2010

செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா?




இன்று கோலாகலமாக தொடங்கிய உலகத் தமிழ் மாநாட்டில் ஒரு முக்கிய நபர் குறித்து கிட்டத்தட்ட பலரின் வாய்களும் முனுமுனுத்தன - அவர் அப்துல் கலாம்.

முன்னாள் குடியரசுத் தலைவரான அப்துல் கலாம் மிகச் சிறந்த தமிழ் ஆர்வலர் என்பது அனைவருக்கும் தெரியும். தமிழ்ப் பற்றுடன் கூடிய அவர் ஏராளமான கவிதைகளைப் படைத்தவர். திருக்குறள் மீது மிகுந்த பற்று கொண்டவர். தமிழ் இசையிலும் பெரும் நாட்டம் படைத்தவர்.

ஆனால் இன்று தொடங்கிய செம்மொழி மாநாட்டில் அவரைக் காணவில்லை. தொடக்க விழாவுக்கு அவரும் அழைக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற முனுமுனுப்பு பெரிதாக எழுந்துள்ளது.

கலாமுக்கு அழைப்பு அழைப்பப்பட்டதா, இல்லையா என்பது தெரியவில்லை. எப்படி இருப்பினும் கலாம் இன்று காணப்படாதது, பலரிடமும் கேள்விளை எழுப்பியுள்ளது.

நன்றி: