Saturday, April 11, 2009

வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் பெயரை சேர்பது எப்படி.?தமிழக தேர்தல் ஆணையத்தின் இணையத்தில் http://www.elections.tn.gov.in/pdfs/acwise_pdf.asp சென்று உங்கள் மாவட்டம் மற்றும் தொகுதி விபரங்களை அளித்து உங்கள் பகுதியின் வாக்காளர் பட்டியளை பார்வையிட்டு பெயர் விடுபட்டிருந்தால் உடனடியாக வாக்காளர் பட்டியளில் ‍சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்கும் படி பொது மக்களை கேட்டுக் கொள்கிறோம்.

இணையத்திலேயே http://www.elections.tn.nic.in/forms.htm படிவங்கள் அணைத்தும் உள்ளன இணையிறக்கம் செய்து ‍கொள்ளவும்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதிக்கு 10 நாள் முன்பு வரை வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதற்கான விண்ணப்ப மனு கொடுக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர்கள் அளிக்கும் மனுக்களை பெற்று தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறது.

இதனால் வேட்புமனு தாக்கலுக்கான கடைசி தேதி நெருங்கும் வரையில் வாக்காளர் பட்டியலில் பொதுமக்கள் தங்கள் பெயரைச் சேர்க்கலாம்.

நன்றி 

பயோடேட்டா-மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர்கள்


 தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் (மயிலாடுதுறை வேட்பாளர்)

பிறந்தது தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி. பள்ளி கல்வி முழுவதும் சென்னையில், புதுக்கல்லூரியில் பட்டப் படிப்பும், சென்னை பல்கலை கழகத்தில் எம்.பி.ஏ, எம்.பில் (இணையதள விளம்பரங்கள்) பி.ஹெச்.டி பட்டம் (இஸ்லாமிய வங்கியியல்) 

30 ஆண்டு காலம் வாணியம்பாடி இஸ்லாமியப் பல்கலை கழகத்தில் பேராசிரியர் பணி. 
மிகச் சிறந்தப் பேச்சாளர். எழுத்தாளர். 

தமுமுக ஆரம்பித்த பொழுது துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டவர், பின்பு குணங்குடி அனிபா விலகலுக்கு பின்னர் இன்று வரை தமுமுகவின் தலைவர் பொறுப்பேற்று பணியாற்றிக் கொண்டிருக்கிறார். 

தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி ((மத்திய சென்னை வேட்பாளர்)

பிறந்தது இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் தமுமுக ஆரம்பித்த காலத்தில் தலைமை கழகச் செயலாளராகப் பணியாற்றிவர். பின்னர் படிப்படியாக கழகத்தின் பொதுச் செயலாளராக உருவானார். படிப்பு 10. பொது வாழ்வில் நீண்ட கால அனுபவம் உள்ளவர். 

லிமுல்லாஹ் கான் (இராமநாதபுரம் வேட்பாளர்)

1998 ஆம் ஆண்டில் இருந்து இராமநாதபுரம் மாவட்டம் தமுமுகவின் தலைவர். இராமநாதபுரம் மாவட்ட முஸ்­ம்களால் பரவலாக அறிமுகம் ஆனவர். படிப்பு 12. பிறந்த ஊர் இராமநாதபுரம். 

Friday, April 10, 2009

பிஜேபிக்கும் பி.ஜேக்கும் ஆப்பு வைத்த மனிதநேய மக்கள் கட்சிமமக அதிமுகவுடன் சேரும் என்பது பிஜே-வின் கனவுகளில் ஒன்று. மமகவின் தாய் கழகமான தமுமுக,  அதிமுக குறித்து வைத்த கடுமையான விமர்சனங்களை சுட்டிக் காட்டி சுட்டிகாட்டியேய் தினசரி அரசியலை நடத்தலாம் என நினைத்திருந்த பி.ஜேயின் கனவு கலைந்தது. 

ஜெயலலிதாவுடன் பி.ஜே உறவு வைத்திருந்த காலத்தில் தமுமுக, பிஜேவையும் ஜெ.ஜெவையும் விமர்சித்தை Re-Play பண்ணி பண்ணியே மமகவுக்கு செக் வைக்கலாம் என்ற நினைத்த கனவும் பாலானது. 

திமுகவை தமுமுக பாராட்டிய கால கட்டங்களை ஒன்று விடாமல் ஒப்பு வித்து மமகவும் ஜெயலலிதாவுக்கும் இடையிலான கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தலாம் என்று நினைத்த இழி கனவும் கலைந்தது.

இனி பிஜேபிக்கு ஆப்பு வைத்ததை பார்க்கலாம். 

தமிழகத்தில் பிஜேபியை அரசியல் அனாதையாக ஆக்கிய பெருமை மமகவிற்கே சேரும். தமிழகத்தில் யாராவது லட்டர் பேடு இயக்கத்தோடாவது கூட்டணி வைத்து விடலாமா என்ற ஏக்கத்தில் இருந்த பிஜேபிக்கு சரத்குமாராவது சேர்நதாரே என்று ஆறுதல் பட்டுக் கொண்டிருந்தது. 

அந்த ஆசைக்கும் ஆப்பு வைத்தது மனிதநேய மக்ககள் கட்சி

Thursday, April 9, 2009

மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்
மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டன. மத்திய சென்னை, மயிலாடுதுறை மற்றும் இராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடுகின்றது.

தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி

மயிலாடுதுறையில் தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், மத்திய சென்னையில் தமுமுக பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி, இராமநாதபுரத்தில் மாவட்டச் செயலாளர் சலிமுல்லாஹ் கான் ஆகியோர் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளனர்.

மேலும் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, டாக்டர். கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சியும் மனித நேய மக்கள் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இவ்விரண்டு கட்சிகள் போட்டியிடும் இடங்களில் மனிதநேய மக்கள் கட்சி அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும்.


சலிமுல்லாஹ் கான்

காதர் மொய்தீன் போட்டி இல்லை ஏணி இல்லை உதய சூரியனாம்


நான்கு தினங்களுக்கு முன்னர் செயற்குழு கூட்டத்திற்குப் பின், காதர் மொய்தீன் எம்.பி., நிருபர்களிடம் கூறியதாவது: ''கட்சியின் முடிவுப்படி வேலூர் தொகுதியில் நான் மீண்டும் போட்டியிடுகிறேன். கடந்த முறை உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டேன். இதை முஸ்லிம் சமூகத்தில் பல்வேறு இயக்கங்கள், கட்சியை தி.மு.க.,வில் அடகு வைத்து விட்டதாக பிரசாரத்தில் ஈடுபட்டன. இந்த பிரசாரத்தை முறியடிக்கும் வகையில், இந்த முறை 'ஏணி' சின்னத்தில் போட்டியிடுகிறேன்'' என்று கூறியது நினைவு இருக்கலாம்.
ஆனால் இப்போது காதர் முகையதீன் வேட்பாளர் தேர்வு நடைபெறுகிறது என்றும் , உதய சூரியன் சின்னத்தில் தான் போட்டியிடப் போவதாகவும், ஏணி சின்னத்தில் இல்லை என்றும் கூறியுள்ளார். இதில் இருந்து திமுகவின் அதிகார பூர்வமான சிறுபான்மை பிரிவு தாங்கள் தான் என்று உறுதி பட தெரிவித்துள்ளார்.
இன்று பேசியதை கீழே காணவும்பேட்டி கொடுக்கும் தலைவர்கள் ஷு அடியில் இருந்து தப்பிப்பது எப்படி? டிப்ஸ்அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் ஈராக் விஜயத்தின் பொழுது முன்ததர் என்ற பத்தரிக்கையாளர் தனது இரண்டு காலணிகளையும் எறிந்து ஒட்டு மொத்த ஈராக் மக்களின் சார்பில் தனது கோபத்தை வெளிப்படுத்தினார். இன்று அவருக்கு ஈராக் அரசு மூன்றாண்டு சிறை தண்டனையும் வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து சீன அதிபர், இஸ்ரேல் தூதர்,  நமது இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ப. சிதம்பரம் என இந்த லிஸ்ட் தொடர்கின்றது. எனவே இனிமேல் இத்தகைய ஷு தாக்குத­ல் இருந்து தப்பிக்க ஏதோ என்னால் ஆன சில டிப்ஸ்கள்.

கிரிக்கெட் விக்கெட் கீப்பர்களை உடன் வைத்திருப்பது உடம்புக்கு நல்லது. (டோனி மட்டும் வேண்டாம்)

மிகப்பெரிய கண்ணாடித் தடுப்புக்குள்ளே இருந்து இருந்து பேட்டி அளிக்கலாம். ஷு எதேனும் பறந்து வந்தாலும் கண்ணாடி தடுத்து விடும். (புல்லட் புருப் கண்ணாடிகளாக இருந்தால் மிகவும் நல்லது)

பத்திரிக்கையாளர்கள் யாரும் ஷு அணிந்து வந்தால் பேட்டி தரமாட்டேன் என்று குழந்தை போன்று அழுதால் நிச்சயம் அதுவும் பரபரப்பாகும்.

பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது குறைந்தது பேட்டி அளிப்பவருக்கும் பத்திரிக்கையாளருக்கும் குறைந்தது 30 அடியாவது இடைவேளை இருப்பது நல்லது. அப்போது தான் ஷுக்கள் பறந்து வந்தால் விலகிக் கொள்ள ஏதுவாக இருக்கும். 


யாரேனும் லட்டர் பேடு இயக்கங்களின் தலைவர்கள் பிரபலம் ஆக வேண்டும் என்றால் பத்திரிக்கையாளர் சந்திப்பினை ஏற்பாடு செய்து அதில் தன் மீது ஷுவை எறியச் சொல்­ பிரபலம் ஆகலாம். (டி. ராஜேந்தர், கார்த்திக், சரத்குமார், பி.ஜே ஆகியோர் முயன்று பார்க்கலாம்)

Tuesday, April 7, 2009

சிதம்பரத்திற்கு ஷு அடி -முன்ததருக்கு 3 ஆண்டு சிறைஒரு காலணியால் உலகப் புகழ் பெற்றவர் முன்ததர் அல் ஜைதி. ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்க முன்னாள் அதிபரின் ஈராக் இறுதி விஜயத்தின் போது முன்ததர் அல் ஜைதி தனது காலணியை கழற்றி வீசி இது உனக்கு கடைசி வழியனுப்புதல் என்றும் முதல் காலணி ஈராக்கை ஆக்கிரமித்ததற்காக, இரண்டாம் காலணி தாக்குதல் ஈராக்கில் அமெரிக்க ராணுவத்தினரால் கொன்று தீர்க்கப்பட்ட பெற்றோர்களுக்காக, அநாதைகளுக்காக என்றும் சொல்லி அடித்திருக்கிறார் இளைஞர் முன்ததர்.
முன்ததர் அல் ஜைதியின் இந்த செயல் அமெரிக்க ஆதரவு நாடுகளி டையே அதிர்ச்சியையும் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை யும் ஏற்படுத்தியதுஅமெரிக்க அதிபர் மீது தாக்குதல் நடத்திய வழக்கின் விசாரணை நீதி மன்றத்தின் முன் வந்தது. முன்ததர் அல் ஜைதிக்கு மூன்றாண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.டிசம்பர் 14 சம்பவம் என வரலாற்றில் அழைக்கப்படும் இந்த சம்பவம் தொடர் பான வழக்கு, விசாரணைக்கு வந்த போது நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு போடப் பட்டது நீதிபதி அப்துல் ஆமிர் ஹசன் தீர்ப்பினை வாசித்தார்.உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டி ருந்த பசுமைப்பகுதியில் முன்ததர் அல் ஜைதியின் உறவினர்கள் 200 பேரும் செய்தியாளர்களும் நீதி மன்றத்தில் நிறைந்திருந்தனர்.


சர்வதேச அளவில் புகழ் பெற்ற முன்னணி வழக்கறிஞர்கள் 25 பேர் நீதிமன்றத்தில் முன்ததருக்காக ஆஜராகியிருந்தனர்.முன்ததர் அல் ஜைதி சாதாரண குற்றவாளி அல்ல. அவர் ஒரு போர்க் குற்றவாளி. எனவே அவர் மீதான நட வடிக்கையின் முடிவு பிரதமர் அலுவ லகத்திலிருந்து எடுக்கப்பட்டது என ஈராக் அதிகார வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.எந்த சுதந்திர குடிமகனும் இதனையே செய்வான். தான் ஒன்றும் தவறாக செய்து விடவில்லை என ஷூ வீரன் முன்ததர் தெரிவித்தார். புஷ்ஷுவை தாக்குவதற்கு முத­ல் ஒரு ஷூவை தான் வீசியதாக வும் அது அவர்மீது படாததால் மறு ஷூவை வீசியதாகவும் புஷ்ஷை கொலை செய்யும் நோக்கம் தனக்கு இல்லை என்றும் முன்ததர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். முன்ததர் மீதான தண் டனையை நீக்கக் கோரி அரபுலகம் எங்கும் போராட்டம் வலுத்து வருகிறது.எங்கள் நாட்டை அழித்ததோடு மட்டுமல்லாமல் வழியனுப்பு விழாவிற்கும் வந்து ஏர்ர்க் க்ஷஹ்ங் ஒழ்ஹய் என புஷ் கூறியது தனது கோபத்தை அதிகரித்ததாக முன்ததர் கூறினார்.எது எப்படியோ புஷ், ஷூ, முன்ததர் என மூன்று அம்சங்களுமே சரித்திரத்தில் இடம்பெற்றுவிட்டன.
இந்தப் பதிவை பதிவிடும் பொழுது நமக்கு கிடைத்த தகவல் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் இதே நிலமை ஏற்பட்டுள்ளது.
\\இந்தப் பதிவை பதிவிடும் பொழுது நமக்கு கிடைத்த தகவல் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் இதே நிலமை ஏற்பட்டுள்ளது.\\வக்ஃபு வாரியத்தை கேட்கிறாரா பி.ஜே?


தம்பி எப்பச் சாவான் திண்ணை எப்ப காலியாகும் என்று இருந்த அண்ணன் பி.ஜெவிற்கு, தமுமுக திமுகவை விட்டு வெளியேறியதால் இப்போது தங்களின் மாநிலப் பொதுக்குழுவில் திமுகவை தீவிரமாக ஆதரிப்பது என்று அறிவித்து விட்டார்.
இனி மேல் வக்ஃபு வாரியத்தை கூட கேட்கலாம்?


அது சரி தமிழ்நாடு தௌஹித் ஜமாத்தை கலைத்து விட்டு ஒட்டு மொத்தமாக ஜாக்கில் இணைய விருப்பதாக ஒரு செய்து சுற்றுகிறதே. இதற்கு அண்ணன் என்ன பதில் சொல்லுவார்?

Sunday, April 5, 2009

உதய சூரியன் சின்னம் வேண்டாம் ஏணி சின்னமே போதும் : முஸ்லிம் லீக்

வேலூர் தொகுதியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் காதர் மொய்தீன் எம்.பி., மீண்டும் போட்டியிடுகிறார். “ஏணி’ சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க., கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதியில் தற்போதைய எம்.பி.,யும், கட்சித் தலைவருமான காதர் மொய்தீன் மீண்டும் போட்டியிடுகிறார். சென்னையில் நேற்று நடந்த கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


சொந்தச் சின்னத்தில் நிற்பதற்கு வக்கு இல்லாத காரணத்தினால் போன முறை உதய சூரியன் சின்னத்தில் நின்றது. ஆனால் இந்த முறை தமுமுக உள்ளிட்ட பல சமுதாய இயக்கங்கள் இதனை கடுமையாக விமர்சித்ததன் விளைவாக இன்று ஏணியிலே நிற்பதற்கு புத்தி வந்துள்ளது காதர் மைதினுக்கு.

இராமநாதபுரத்தில் போட்டியிடும் ஆர்.கே. ரித்திஸ்தமிழ் திரையுலகத்தின் மெகா சூப்பர் ஸ்டார் ஆர்.கே. ரித்திஸ் இராமநாதபுரம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். 

கானல் நீர் என்ற திரைபடத்தினை தயாரித்து அதில் தானே நடித்து, பின்னர் அதனை தானே வெளியிட்டு மக்கள் பார்வையிடுவதற்காக ரூ100 பணமும், பிரியாணி பொட்டலமும் கொடுத்து பார்க்கச் சொன்னாலும் ஒரு பயளும் தியேட்டர் பக்கம் வரவில்லை.


இன்று இராமநாதபுரத்தில் போட்டியிடுவதால் ஒரு ஓட்டுக்கு பல பிரியாணி பொட்டலமும், ரூ.1,000மும் கிடைப்பது உறுதி. ஆனால் ஓட்டு போடுவார்களா என்றால் அது நிச்சயமில்லை.   

இராநாதபுரம் மட்டும் இல்லாமல் இன்னும் இரண்டு தொகுதியையும் சேர்த்து தேர்தல் செலவு செய்வதாகவும் அறிவித்துள்ளார் ரித்திஸ். தமிழச்சி தங்க 
பாண்டியனுக்கு கிடைக்காத இராமநாதபுரம் ரித்திஷ்க்கு கிடைத்திருக்கிறது. 

முக்குல சமுதாயத்தைச் சோந்த ரித்திஷ்க்கு பாரதிய ஜனதாவைச் சேர்ந்த திருநாவுக்கரசு தன் பங்கிற்கு முக்குலத்தோர் ஓட்டினை பிரிக்கும் வாய்ப்பு 
பெருமளவு உள்ளது.

தலைவனின் நிலா நிலா ஓடி வா கீழே