Friday, May 22, 2009

வோடபோனின் ஜூஜூ விளம்பரத்துக்கு பெட்டா விருது

மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றிருக்கும் வோடபோன் ஜூஜூ விளம்பரத்துக்கு பெட்டா விலங்குகள் நல அமைப்பின் சிறப்பு விருது கிடைத்திருக்கிறது.ஐபிஎல் போட்டிகளுக்கு நடுவிலும் மற்ற சேனல்களிலும் வோடபோன் நிறுவனத்தின் ஜூஜூ விளம்பரங்கள் தற்போது அதிகம் ஒளிபரப்பாகின்றன. இவை கார்ட்டூன் உருவங்கள் என்று முதலில் கருதப்பட்டன. மும்பையை சேர்ந்த மெலிதான, குள்ளமான பெண்கள்தான் முகமூடி அணிந்து நடித்துள்ளனர்.ரூ.30 கோடி செலவில் மொத்தம் 30 விளம்பரங்கள் இவர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டதாக வோடபோன் விளக்கம் அளித்தது.விலங்குகள் நல அமைப்பான பெட்டா சார்பில் இந்த விளம்பரங்களுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெட்டா அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் அனுராதா சாஹ்னி கூறியதாவது: வோடபோன் விளம்பரங்களில் நாய் பயன்படுத்தப்பட்டதற்கு பெட்டா அமைப்பும் விலங்குகள் நல ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். விலங்குகளை லாப நோக்கில் பயன்படுத்தக்கூடாது என்ற கூறினோம். தற்போது விலங்குகளுக்கு மாற்றாக கார்ட்டூன் உருவங்கள் போலவே பெண்களை பயன்படுத்தி விளம்பரம் தயாரித்துள்ளனர். விலங்குகளை பயன்படுத்தாமலேயே கருத்தை திறம்பட தெரிவிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.விலங்குகளை பாதுகாக்கும் நோக்கில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்க பெட்டா முடிவு செய்துள்ளது. முதலாவது விருது, வோடபோன் ஜூஜூ விளம்பரங்களுக்கு வழங்கப்படுகிறது.

Thursday, May 21, 2009

பிரபல பத்திரிக்கையாளருக்கு திருமணம்

எனது கெழுதகை நண்பர் அத்தேஷ் அவர்களுக்கு இன்று (21.05.09) தூத்துக்குடியில் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் தமுமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ். ரிஃபாயி, மவ்லவி மிஸ்பாஹ், வழக்கறிஞர் ஜைனுல் ஆபிதீன் (ம.ம.கவின் ஊடகக் குழு பொறுப்பாளர் )மற்றும் நெல்லை தூத்துக்குடி மாவட்ட த.மு.மு.க, ம.ம.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மணமக்களுக்காக துஆ செய்யவும்.

காங்கிரஸ்க்கு வெளியில் இருந்து ஆதரவு தருகிறது திமுக

அமைச்சர் பதவி பெற்றுத் தருவதில் மும்முரமாக இருக்கிறார். மொத்தம் 7 அமைச்சர் பதவிகள் வேண்டும் என்றும் அவற்றில் 3 கேபினட் அமைச்சர் பதவி வேண்டும் என்பது அவரின் ஆவல். காங்கிரஸோ 6 தருகிறோம். அதில் 2 கேபினட் அமைச்சர் பதவியும் கட்டாயமாக தருகிறோம் என்கிறது.
ம்... கலைஞரிடம் பலிக்க வில்லை காங்கிரஸின் பாச்சா.
விடுவாரா பெரியவர். உண்ணா விரத வீரர் ஆயிற்றே. (டில்லியில் காந்தி சமாதி இருக்கிறது என்கிற தகவல் கலைஞருக்கு தெரியாமலா இருக்கும்)

நாங்கள் வெளியில் இருந்து ஆதரவு தருகிறோம்- என்கிறார் கலைஞர்.

பார்ப்போம் தன்னோட புள்ளைகளுக்கும், பேரனுக்கும் சேர்த்து எத்தனை அமைச்சர் பதவிகளோட வருகிறார் என்று.

10-இலவச லினக்ஸ் ஈ-புத்தகங்கள்

அப்பாடா இன்றொட என்னைய பிடித்திருந்த பீடை ஒளிந்தது. ஆமாம் நான் உபுண்டுவிற்கு (லினக்ஸ்) மாறிவிட்டேன். 
என் இனிய உபுண்டு மக்களுக்காக 10 லினக்ஸ் ஈ-புத்தகங்களை உங்களுக்காக அறிமுகம் செய்கிறேன்.
 


ஈழத் தமிழர்களுடன் எனது உறவு..

ஈழத் தமிழர்கள் யாவரும் எனது தொப்புள் கொடி உறவுகள் என்று ஒரு பொய்யான நடையில் இந்த பதிய விரும்பவில்லை. அவர்களுடனான எனது அனுபவங்களை எழுதுவது மட்டுமே எனது நோக்கம்.

நான் மண்டபம் முகாமிலுள்ள அகதிகள் முகாமில் தான் எனது ஐந்து வருடகால பள்ளி வாழ்க்கை ஒரு மின்னலை போல விரைவாகவே கடந்தது. 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் போது நான் பள்ளி மாணவர்கள் அனைவர் மத்தியிலும் நான் பரவலாக அறிமுகமாகி விட்டேன். காரணம் கட்டுரைகள், கவிதை என்று பத்திரிக்கைகளில் எனது படைப்புகள் வெளியாகும் பொழுதெல்லாம் அதனை பிரேயர்களில் அறிவித்து விடுவார் எனது தமிழாசிரியர். பிறகு கேட்க வேண்டுமா ஒரு ஹிரோ அந்தஸ்த்துடன் வலம் வந்த அந்த நாட்கள் திரும்பவும் கிடைக்காது.


என்னுடன் ஈழ மாணவ+மாணவிகள் 5 பேர்கள் படித்தனர். அவர்கள் யாவரும் என்னுடன் வயதில் மூத்தவர்களாக இருந்தனர். காரணம் இலங்கையில் 10 ஆம் வகுப்பு முடித்திருந்தால் இங்கே 8ஆம் வகுப்பில் தான் அவர்களுக்கு அட்மிஸன் வழங்குவார்கள். மற்றொன்று அவர்கள் நீண்ட நாட்கள் கழித்து தங்களின் பள்ளி வாழ்க்கையை துவங்கு பவராக இருப்பார்கள். வயதில் சிறிய வயது பசங்களோடு படிக்கிறோம் என்ற பள்ளியில் சேரும் புதிதில் இருக்கும். அதுவும் போகப் போக பழகியும் விடும். 

என்னுடைய ஈழ நண்பர்கள்  விளையாட்டில் சூரர்களாக இருந்ததால் எங்களோடு பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் பதக்க பட்டிய­ல் முன்னணியில் இருக்கும். பெரும்பாலும் முத்தையா முரளிதரன் தான் அவர்களின் ஆதர்சன நாயகனாக இருந்தார்.

ஒருநாள் அகிலேஸ்வரி என்ற சக மாணவி ''நீங்கள் கதை, கட்டுரை எல்லாம் எழுதுவீங்கள் தான்னே. ஏன் எங்களைப் பற்றியும், எங்களோட மக்களை பற்றியும் எழுதக் கூடாது'' என்று கேட்டார். நான் உங்களைப் பற்றி அறியாமையில் இருக்கிறேன் என்றும், உங்களைப் பற்றி சொல்லுங்கள் என்றும் கேட்டேன். உடனே அவர் அழது கொண்டே வகுப்பறை விட்டே ஓடி விட்டார். இதை பார்த்ததும் சக மாணவ, மாணவிகள் என்னை ஏதோ அனக்கோண்டா பாம்பை பார்க்கிற மாதிரி பார்த்ததும் ஒரு மாதிரியாகி விட்டது. விசயம் வகுப்பாசிரியர் வரை சென்று அவர் என்னை கூப்பிட்டு கண்டித்தனுப்பினார். 
ஒரு வாரம் கழிந்தது, அகிலா பள்ளி பக்கமே தலை காட்ட காணோம் என்பதால் ஏதோ குற்றம் புரிந்து விட்ட உணர்வு போல் உடம்பெல்லாம் அரித்தது. அப்போது தூரத்தில் அகிலா வருவது கண்ட உடனே நான் அவரிடம் சென்று ''மன்னித்து விடுங்கள். நான் ஏதாவது தவறுதலாக கேட்டு விட்டேனா என்றுக் கேட்டேன். இல்லை தவறு என்னோடு தான். நீங்கள் தான் என்னை மன்னிக்க வேண்டும். என்னால் அழகையை அடக்க முடியவில்லை. சிங்களவர்கள் என்னோட அக்காவை கற்பழித்துக் கொன்றேப் போட்டார்கள் என்று அவர் கூறியதுமே என்றதுமே எனது முதுகுத் தண்டு ஜில்­ட்டு விட்டது. 

நாங்கள் தாயகம் கிளம்புகிறோம். இப்ப சூழ்நிலை நல்லா இருக்கிறது. நோர்வே அரசு இரு தரப்பிலும் அமைதி பேச்சு வார்த்தை நடத்துகிறது. நீங்கள் எங்களோட மக்கள் அமைதியாக வாழ நீங்களும் பிரார்த்தனை செய்யுங்கள்'' கூறி சென்று விட்டார். 

(அகிலாவின் பிரிவிற்கு பின்னர் நான் முத­ல் மண்டபம் முகாமில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் உள்ள அவலங்களை எல்லாம் புகைப்படம் மெடுத்து அவற்றை கட்டுரைகளாக பத்திரிக்கைகளில்  வந்ததும், அவற்றுக்கான வரவேற்பு இருந்ததோடு ஒரு சில வசதிகளும் மண்டபம் அகதிகள் முகாமிற்கு கிட்டியது.அகிலா போன்றே மண்டபம் அகதிகள் முகாமில் ஏராளமானோர் நிரம்பி வழிந்ததை பின்னர் உணர முடிந்தது.)

பிரார்த்தனையோடு ஈழத்தில் என்ன தான் நடந்து வருகின்றது என்று எனது பள்ளிநாட்களில் இருந்து தற்போது கல்லூரி நாட்கள் வரையிலும் தொடர்ந்து கவனித்து வந்து கோண்டு தான் இருக்கிறேன். 

சமீபத்தில் நிகழ்ந்தாகச் சொல்லப்பட்ட பிரபாகரனின் மரணம் என்னை மிகவும் பாதித்த மரணங்களில் ஒன்று. சதாம் உசேன் தூக்கி­டப்பட்டபோதும், வீரப்பனை பிணமாக காட்டிய போதும் நான் இதே நிலைக்கு ஆளாகியதாக கருதுகிறேன். பு­கள் பொறுத்தவரை மலையக மக்களிடம் அவர்களுக்கும் உள்ள உறவு, காத்தான் குடி படுகொலைகள், மூதூர் படுகொலைகள் பற்றி எல்லாம் எனக்கு மாற்றுக் கருத்துக்கள் உண்டு. அவற்றைப் பற்றி விரிவாக எழுதுவதற்கான நேரம் இது இல்லை.

இன்று அகிலா என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று எனக்குத் தெரியாது? ஆனால் அவருக்காக எனது பிரார்த்தனைகள் எப்போதும் உண்டு.

Sunday, May 17, 2009

பி.ஜே.பி தோல்வி ஏன் ஆதாரங்களுடன் சுப்பிரமணிய சுவாமி (நகைச்சுவை)அரசியல் சாணக்கியர், டீ பார்ட்டிகளின் மூலம் அரசாங்கத்தை கவிழ்தியவர், முருகன் இட்லி கடையின் பூட்டை உடைத்தவர், அழகிரிக்கு முன்பே மதுரையில் ஜெயித்தவர், அமெரிக்க உளவுத் துறையின் தோழர் என பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணிய சுவாமி மரைக்காயருக்கு அளித்த பிரத்யேக பேட்டி (நகைச்சுவை கற்பனை)மரைக்காயர்: பி.ஜே.பி தோற்கும் என நினைத்தீர்களா?சுவாமி: இதோ பாருங்கோ, நான் அன்னைக்கே அத்வானி ஜியிடம் சொன்னேன். காங்கிரஸ் வெற்றிக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ-தான் காரணம். இதற்கான ஆதாரங்களை நான் அண்டார்டிக்கா கண்டத்தில் இருந்து கொண்டு வந்திருக்கிறேன்.மரைக்காயர்: ஆதாரங்களை வெளியிடுவீங்களா?சுவாமி: இட்லி வடை இல்லை லக்கி லுக் கேட்டாள் தருவேன்.மரைக்காயர்: மனிதநேய மக்கள் கட்சி பற்றி?சுவாமி: அவாள் தோற்றதுக்கு காரணம் என்னவென்றால். நம்ம பி.ஜே தான் காரணம். நேக்கு தெரியும் அவள்ட்ட 50 லட்சம் ஓட்டு இருக்கு தெரியுமோ. அடுத்த தேர்தல் வரும் போது நீங்கள் வேண்டுமானால் பாருங்கோ பி.ஜே-பி.ஜே.பி கூட்டணி தான் ஜெயிக்கும் பாருங்கள்.

மரைக்காயர்: சிவகங்கையில்ல சிதம்பரம்?சுவாமி: சிதம்பரம் சில்லறையை கொடுத்து ஜெயித்துட்டார். நான் மொஸார்டுட்ட இருந்து இதற்கான சார்ட்டிலைட் படங்களை வாங்கி வைத்து இருக்கிறேன்.மரைக்காயர்: ஹை கோர்ட் பக்கம் வருவேளா?


சுவாமி : இதோ பாருங்கோ. இந்த வக்கில் எல்லாமே பிட் அடித்து பாஸ் ஆனவா. அதனாலே நான் இனிமே வரமாட்டேன்.