Friday, May 22, 2009

வோடபோனின் ஜூஜூ விளம்பரத்துக்கு பெட்டா விருது

மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றிருக்கும் வோடபோன் ஜூஜூ விளம்பரத்துக்கு பெட்டா விலங்குகள் நல அமைப்பின் சிறப்பு விருது கிடைத்திருக்கிறது.ஐபிஎல் போட்டிகளுக்கு நடுவிலும் மற்ற சேனல்களிலும் வோடபோன் நிறுவனத்தின் ஜூஜூ விளம்பரங்கள் தற்போது அதிகம் ஒளிபரப்பாகின்றன. இவை கார்ட்டூன் உருவங்கள் என்று முதலில் கருதப்பட்டன. மும்பையை சேர்ந்த மெலிதான, குள்ளமான பெண்கள்தான் முகமூடி அணிந்து நடித்துள்ளனர்.



ரூ.30 கோடி செலவில் மொத்தம் 30 விளம்பரங்கள் இவர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டதாக வோடபோன் விளக்கம் அளித்தது.விலங்குகள் நல அமைப்பான பெட்டா சார்பில் இந்த விளம்பரங்களுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெட்டா அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் அனுராதா சாஹ்னி கூறியதாவது: வோடபோன் விளம்பரங்களில் நாய் பயன்படுத்தப்பட்டதற்கு பெட்டா அமைப்பும் விலங்குகள் நல ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். விலங்குகளை லாப நோக்கில் பயன்படுத்தக்கூடாது என்ற கூறினோம். தற்போது விலங்குகளுக்கு மாற்றாக கார்ட்டூன் உருவங்கள் போலவே பெண்களை பயன்படுத்தி விளம்பரம் தயாரித்துள்ளனர். விலங்குகளை பயன்படுத்தாமலேயே கருத்தை திறம்பட தெரிவிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.விலங்குகளை பாதுகாக்கும் நோக்கில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்க பெட்டா முடிவு செய்துள்ளது. முதலாவது விருது, வோடபோன் ஜூஜூ விளம்பரங்களுக்கு வழங்கப்படுகிறது.