Saturday, May 16, 2009

2009 தேர்தல் நகைச்சுவை டாப்-10 வலைப் பதிவுகள்


ஒரு வழியாக தமிழகத்தில் மரைக்காயரின் பிரமாண்டமான பிரச்சார வியூகங்களையும் மீறி மத்தியில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர விருக்கிறது. இவ்வேளையில் நமது வலைபதிவு நண்பர்கள் எல்லாம் இந்த தேர்தலில் நகைச்சுவை விருந்தளித்த டாப் 10 பதிவுகளை தொகுத்திருக்கிறேன். பார்த்து விட்டு சொல்லுங்கள்...

Wednesday, May 13, 2009

திமுக கள்ள ஓட்டு - தமுமுகவினர் மீது அரிவாள் வெட்டு

திருவல்லிக்கேணி ஐஸ் அவுஸ் பகுதியில் கள்ள ஓட்டுப் போட்ட திமுகவினரை தடுக்க முயன்ற தமுமுகவினரை திமுக குண்டர்கள் கத்தி அருவாள்களுடன் தாக்குதல்கள் நடத்தியுள்ளனர். இதில் 10க்கும் மேற்பட்ட தமுமுகவினர் கடும் காயமடைந்திருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


உடனே சம்பவம் நிகழ்விடத்திலேயெ ஆயிரக்கணக்கான தமுமுகவினர் குவிந்து தாக்குதல் நடத்தியவர்களை தண்டிக்கக் கோரியும், மறுதேர்தல் நடத்த வேண்டும் எனக் கோரிக்கைகளுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

காயமடைந்த ஜாகிர், மீராமைதீன், வசீம், சலாவுதீன், இபுறாகீம், மற்றும் சுதீர் ஆகியோர் கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


உடனே சேதி அறிந்து வந்த சென்னை மாநகர கமிஷ்ணர் ராதாகிருஷ்ணன் அளித்த வாக்குறுதியின் பெயரில் சாலை மறியலை தமுமுகவினர் கைவிட்டனர்.

Tuesday, May 12, 2009

இந்தியா டுடேயில் எனது பதிவு


இந்த வார இந்தியா டுடெயில் தேர்தல் 2009 வலைபதிவுகள் என்ற கட்டுரையில் எனது மரைக்காயர் பிளாக்கில் இடம் பெற்ற இரண்டு கட்டுரைகளை கட்டுரையாளர் சுட்டிக் காட்டியுள்ளர். வீட்டுக்கு ஒரு நானோ கார் ரித்திஸ் வாக்குறுதி மற்றும் கலைஞர் உண்ணா விரதம் நாடகம் என்ற இரண்டு பதிவுகளையும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

Sunday, May 10, 2009

கையெழுத்தைக் கூடவா இப்படி துருவி துருவி ஆராய்வானுங்கமத்திய சென்னை தொகுதியின் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளராகஹைதர்அலி போட்டியிடுகிறார். முன்னாள் வக்பு வாரியத் தலைவரான இவர், தனது அமைப்பின் சார்பில் ரத்த தானம் மற்றும் அவசர உதவி ஊர்தி வசதி செய்துபிரபலம் ஆனவர்.இவர் தற்போது மத்திய சென்னை தொகுதியில் ரயில் இன்ஜின்சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர், தொகுதி மக்களுக்கு அளித்துள்ளவாக்குறுதிப் பிரசுரத்தில், தான் வெற்றி பெற்றால் என்னென்ன திட்டங்களைநிறைவேற்றுவேன் என்பதைக் கூறி, இறுதியில் கையெழுத்திட்டுள்ளார்.


அவரது கையெழுத்து வித்தியாசமாக அமைந்துள்ளது. சிலுவை தாங்கிய ஒருமனிதன், தனது நெற்றியில் விபூதிப் பட்டை அணிந்திருப்பது போல் உள்ளது. அதோடு, முகமது நபி பிறந்த ஆண்டைக் குறிக்கும் வகையில், 786 என்றஎண்ணும் மறைமுகமாக இடம் பெற்றுள்ளது. அதோடு, வெற்றியைக் குறிக்கும்வி' குறியும் அதில் உள்ளது.அவரது ஒட்டு மொத்த கையெழுத்தையும் பார்த்தால், 9ம் என்ற எண் தெரிகிறது. கையெழுத்திலேயே மதச் சார்பின்மையை இடம் பெறச்செய்துள்ள ஹைதர்அலியை தொகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.
"