Saturday, June 6, 2009

நான்ஸி அஜ்ரம்-ஹைய்பா வஹாஃபி பாடல்கள் கேட்டதுண்டா?

நான்ஸி அஜ்ரம்


ஹய்பா வஹாஃபி

எனது நண்பன் செல்போனில் இந்த இரு அரபுக் குதிரைகளின் பாடல்களை வைத்திருந்தான். கேட்டதுமே தலைகால் புரியலை. நீங்களே பாருங்கள்.

சிறு குறிப்பு: முதலில் உள்ள பாட்டையோ அல்லது இரண்டாவது உள்ள பாட்டையோ தனித்தனியாக கேளுங்கள். அல்லது இரண்டையும் ஒரே சமயத்தில் பிளை பண்ணிக் கேட்டாலும் சலிக்காது.

Friday, June 5, 2009

சரத்யாதவ் ப்ளிஸ் தற்கொலை செய்து கொள்ளுங்கள்


அட நம்ம ஆளுங்கள் பெண்களுக்கான 50 சதவீதம் இட ஒதுக்கீடு தரக்கூடிய மசோதாவை விரைவில் நிறைவேற்றப் போகிறராங்களாம். என்னைக் கேட்டால் ஆண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க யார் முன்வருவார்களோ அவர்களுக்கு என் குடும்பத்தில் உள்ள 59 ஓட்டுகளும்.
எதற்கு 50 சதவீத இடஒதுக்கீடாம்.


நம்ம குடியரசுத் தலைவர் ஒரு பெண் தான்.


சபாநாயகர் யாரு பெண் தான்.


ரயில்வே அமைச்சரும் பெண் தான். இவ்வளவு ஏன்?


குடியரசுத் தலைவர் மற்றும் சபாநாயகரை கொண்டு வந்த நம்ம சோனியா அம்மையாரே பெண்தானுங்களே.


இப்படி பெண் இன்றி அமையாது என்ற மரைக்காயரின் குரலுக்கு ஏற்ப ஐக்கிய தனதா தள தலைவர் சரத்யாதவ் மட்டும் தான் இந்த மாபாதக செயலை கண்டித்து தன்னுயிரை கூட துச்சமாக மதித்து விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்வேன் என்று உருக்கமாக (!) கூறியுள்ளதை நான் வரவேற்கிறேன். ப்ளிஸ் சொன்னதை செய்யுங்கள் சார்.

ஜெய் ஹோ பாட்டு எல்லாம் சப்பை - இந்த பாட்டைப் பாருங்கள்

அட என்னங்க.ஆஸ்கார் அவார்டு தருவது என்றால் ரகுமானோட எத்தனையோ பாட்டு இருக்கு வெள்ளைக்கார பக்கிங்க இந்த ஜெய் ஹோவிற்கு கொடுத்து இருங்கானுங்க. ஜோதா அக்பர் படத்துள்ள இந்த பாட்டுக்கு மனுசன் என்னம்மா மெனக்கெட்டு இருக்கார் பாருங்க. மேலும் ரகுமானின் வீச்சுக்கு இணை கொடுக்க முடியாமல் கேமிரா மேனும், செட்டிங் போட்டவரும் தோல்வியடைந்திருக்காங்கள்னு தான் எனக்கு தோனுது. ஹிந்தியில் இந்தப் பாட்டைப் பார்த்தால் யாருக்கு புரியப் போகின்றது. அதான் தமிழ் பாருங்கள். ஹிந்தியில் ஜாவித் அக்தரின் வரிகளுக்கு தமிழில் முத்துக்குமாரும் சளைத்தவரல்ல என்று நிருபித்திருக்கிறார். என்ன நான் சொல்றது சரிதானே.

Thursday, June 4, 2009

அமெரிக்கா முஸ்லிம் நாடுகளிடையே உறவில் புதிய ஆரம்பம் வேண்டும்: அதிபர் ஒபாமா


எகிப்தில் உரையாற்றிய அதிபர் , ''உலகெங்கும் உள்ள முஸ்லிம்களுக்கும் இடையே ஒரு புதிய ஆரம்பம் வேண்டும் என்று அழைப்பு விடுக்கும் அதிபர் ஒபாமாவின் உரைக்கு பெருத்த கரகோஷத்துடனான வரவேற்பு கிடைத்தது.

கெய்ரோ பல்கலைக்கழகத்தில் அவர் ஆற்றிய இந்த உரையில், அமெரிக்காவும், இஸ்லாமும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல, நீதி, முன்னேற்றம் மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றின் பொது அடிப்படைகளை அவை பகிர்ந்துகொள்பவை என்று ஒபாமா கூறியிருக்கிறார்.

முஸ்லிம்கள் பற்றிய மோசமான விம்பத்துக்கு எதிராக தான் போராடுவேன் என்று உறுதி கூறிய ஒபாமா அவர்கள், அதேவிடயத்தை அமெரிக்கா பற்றிய கருதுகோள் குறித்து முஸ்லிம்களும் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஒரு நாட்டின் மீது மற்றுமொரு நாட்டினால், எந்த வகையான அரசாங்க முறைமையும் திணிக்கப்படக் கூடாது என்று குறிப்பிட்ட அவர், ஆனால், அரசாங்கங்கள் அந்த நாட்டு மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.


அதிபர் ஒபாமாவின் உரை குறித்து இஸ்ரேல் எச்சரிக்கையுடன் பதிலுரைத்துள்ளது.


பாலத்தீன பிராந்தியங்களில் இருந்து இந்த உரைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


இது ஒரு நல்ல ஆரம்பம் என்று பாலத்தீன நிர்வாகம் இந்த உரையை வெகுவாக வரவேற்றுள்ளது. தற்போதுள்ள நிலைமைகளுக்கு மத்தியிலும், இது ஒரு வெளிப்படையான மாற்றத்தைக் காண்பிக்கிறது என்று ஹமாஸ் கூறியுள்ளது.


இந்த உரை ஒரு வரலாறு என்றும் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் கூறியுள்ள இராக்கிய அரசாங்கப் பேச்சாளர் ஒருவர், ஆனால் வார்த்தைகளில் கூறியவை நடவடிக்கைகளில் காண்பிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Wednesday, June 3, 2009

பசங்க: தமிழில் குழந்தைகள் சினிமாவுக்கான முதல் முயற்சிTakeshi Miike என்ற ஜப்பானிய இயக்குனரின் Ichi the Killer என்ற படம் மேற்கத்திய பார்வையாளர்களுக்காகத் திரையிடப்பட்ட போது அவர்களின் கையில் Vomit bag என்று சொல்லி ஒரு பையையும் கூடவே கொடுத்தார்கள் என்பது செய்தி. அந்த அளவுக்கு குரூரமான ஒரு படம் இச்சி தெ கில்லர். தமிழில் இதுவரை வெளிவந்துள்ள குழந்தைகள் நடித்த படங்களைப் பார்த்தால் மேற்சொன்ன தகேஷி மீகேவே வாந்தி எடுத்து விடுவார் என்ற அளவுக்குத் தமிழ் சினிமா குழந்தைகளைச் சித்ரவதை செய்திருக்கிறது. இதுபற்றிப் பேசாமல் ‘பசங்க’ படத்தைப் பற்றி மட்டும் தனியாகப் பேச முடியாது என்பதால் முதலில் தமிழில் குழந்தைகள் நடித்துள்ள சில படங்களைப் பற்றிப் பார்ப்போம்.முதலில் ஞாபகம் வருபவர், மணி ரத்னம். அவருடைய ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் வரும் அமுதா என்ற குழந்தை ஒரு ஈழப் போராளிப் பெண்ணால் கைவிடப் படுகிறாள். அந்தக் குழந்தையை தங்களுடைய குழந்தையாக எண்ணி வளர்க்கிறார்கள் ஒரு தம்பதி. ஒன்பது ஆண்டுகள் கழித்து, அந்தக் குழந்தையின் உண்மையான பெற்றோர் தாங்கள் இல்லை என்பதை அந்தத் தம்பதி குழந்தையிடம் தெரிவிக்கிறார்கள். இப்படி யாரும் தெரிவிக்க மாட்டார்கள் என்பதோ, இப்படித் தெரிவிப்பது, அல்லது, படத்தில் வருவது போல் அவ்வளவு குரூரமாகத் தெரிவிப்பதன் செயற்கைத் தன்மையோ இயக்குனருக்குத் தெரியவில்லை. படத்தில் அதற்குப் பின் வருவதுதான் பயங்கரம். இதை ஒரு Horror படம் என்று போட்டிருந்தால் நமக்குப் பிரச்சினையே இல்லை. ஒன்பது வயதில் ‘இவர்கள் தன்னுடைய உண்மையான பெற்றோர் இல்லை; வளர்த்தவர்கள்தான்’ என்று அவர்களிடமிருந்தே தெரிந்து கொள்ளும் அமுதா தன்னுடைய ‘உண்மையான’ பெற்றோரைத் தேடி இலங்கை செல்கிறாள். இப்படிப்பட்ட கொடூரமான கற்பனையையெல்லாம் Fetish ரகப் படங்களில் கூட நாம் பார்க்க முடியாது.
இந்தப் படத்தைப் பார்க்கும் போது எனக்கு Exorcist (1973) என்ற படமே மீண்டும் மீண்டும் ஞாபகம் வந்தது. அந்தப் படத்தில் ஒரு 12 வயதுச் சிறுமியை பேய் பிடித்து விடுகிறது. பிறகு அந்தச் சிறுமியின் உடம்பில் புகுந்த பேய் பண்ணும் அட்டகாசங்களும் அதி பயங்கரங்களும்தான் படம்.குழந்தைகளின் பிரச்சினையை மையமாக வைத்து மணி ரத்னம் எடுத்த இன்னொரு படம், அஞ்சலி. ’கன்னத்தில் முத்தமிட்டால்’ அமுதா ஒரு டெரரிஸ்ட் என்றால் இதில் வரும் அஞ்சலி என்ற ஒன்றரை வயதுக் குழந்தை ஒரு பைத்தியம். அஞ்சலியாக நடித்த ஷாமிலி இதற்காக ஜனாதிபதி பரிசும் பெற்றாள்! இவளுடைய அக்காதான் அந்தக் காலத்தில் மிகப் பிரபலமாக இருந்து பெரிய மனிதர்களைப் போல் தத்துவ வசனங்களையெல்லாம் உதிர்த்துக் கொண்டிருந்த பேபி ஷாலினி. அஞ்சலி தவிர படத்தில் மேலும் ஒரு பத்து இருபது குழந்தைகள் வருகிறார்கள். அஞ்சலி பைத்தியம் என்றால், இந்தக் குழந்தைகள் அனைவரும் கிரிமினல்கள்!இந்தியா முழுவதும் பாராட்டப்படும் மணி ரத்னத்தின் குழந்தைகளுக்கே இந்தக் கதி என்றால், சாமான்யத் தமிழ் சினிமா இயக்குனர்களைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?குழந்தைகள் இடம் பெறும் படங்களிலெல்லாம் அந்தக் குழந்தைகள் 80 வயதுக் கிழவிகள் பேசுவது போலவே பேசுவார்கள். இப்படிப் பேசியே புகழ் பெற்ற குழந்தை நட்சத்திரங்களான பேபி ஷகிலா, குட்டி பத்மினி, ஸ்ரீதேவி, கமல்ஹாசன் போன்றவர்களைப் பற்றி எழுத வேண்டுமென்றால் ஆளுக்கு ஒரு ஆய்வுக் கட்டுரை எழுத வேண்டியிருக்கும். உதாரணமாக, ’குழந்தையும் தெய்வமும்’ படத்தில் கதாநாயகனுக்கு இணையாக வசனம் பேசுவார் குட்டி பத்மினி. எம்ஜியார், சிவாஜி படங்களில் நடித்த பேபி ஷகிலாவுக்கு எம்ஜியார் படத்தில் நடிக்கும் போது மட்டும் இன்னொரு பிரச்சினை. எம்ஜியார் குழந்தைகளைத் தூக்கிப் போட்டுத்தான் கொஞ்சுவார். அவருக்கோ அவ்வளவாக நடிக்க வராது. அதனால் ஆறு ஏழு டேக் வாங்கினால், குழந்தையை ஆறு ஏழு முறை தூக்கிப் போட வேண்டும். என்ன பாவம் செய்ததோ அந்தக் குழந்தை பேபி ஷகிலா!குழந்தைகள் பெரியவர்களைப் போலவும், தாத்தா பாட்டிகளைப் போலவும் பேசுவது போதாது என்று அதற்கும் மேலே ஒரு படி சென்று அவர்களை தெய்வங்களாகவும் ஆக்கியது தமிழ் சினிமா.குழந்தை நட்சத்திரம் ஸ்ரீதேவிதான் அந்தக் காலத்தின் முருகன், கிருஷ்ணன் எல்லாம். கந்தன் கருணையில் அவர் முருகனாக வருவார். குழந்தைகளைப் பெரியவர்களைப் போல் நடிக்க வைப்பதே ஒரு வன்கொடுமை என்றால், அவர்களைத் தெய்வங்களாக நடிக்க வைப்பது அதைவிடக் கொடுமை.
இப்படியெல்லாம் குழந்தைகளை வதைத்துக் கொண்டிருந்த தமிழ் சினிமா சூழலின் பின்னணியில்தான் ’பசங்க’ என்ற குழந்தைகள் படம் வெளியாகியுள்ளது. விராச்சிலை என்ற கிராமம். அங்கே உள்ள அரசினர் பள்ளியில் படிக்கும் ஜீவா என்ற மாணவன். அந்தப் பள்ளிக்குப் புதிதாக வந்து சேரும் அன்பு. ஜீவாவுக்கும் அன்புவுக்கும் நடக்கும் மோதல். பொறாமை, திமிர், விரோத மனோபாவம் போன்ற தீய குணங்களைக் கொண்டவனாக ஜீவா. ஜீவாவின் அப்பாதான் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர். அவர்தான் இந்தப் பசங்களின் வகுப்பு ஆசிரியரும் கூட. ஜீவாவின் தோழர்களான பக்கடா, குட்டி மணியும் கூட ஜீவாவைப் போன்றே கெட்ட குணங்களைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.இந்த கோஷ்டிக்கு நேர் எதிராக அன்பும் பண்பும் கொண்ட புதிய மாணவன் அன்பு. அன்புவிடம் மிகுந்த சிநேகமாக இருக்கும் வகுப்புத் தோழி மனோன்மணி. இவள் ஜீவாவின் சொந்தக்காரி. ஜீவாவுக்கும் அன்புவுக்கும் இடையிலான சண்டை கடைசியில் சமாதானம் ஆகி படம் முடிவடைகிறது. இதுதான் படத்தின் கதை. வழக்கமான தமிழ் சினிமா கதைதான் என்றாலும் சொல்லப்பட்ட விதத்தில் சர்வதேசத் தரத்தை எட்டியிருக்கிறது.


http://www.charuonline.com/June2009/Pasanga1.html

கருணாநிதியின் கவலைகளும் பிரபாகரன் பற்றிய கவலைகளும்

காட்சிகளில் டெல்லியில் தள்ளு வண்டியில் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியை வைத்து தள்ளிக் கொண்டு சென்றபடி அவருடைய குடும்ப உறுப்பினர்களும் குடும்ப விஸ்வாசிகளும் வலம் வந்த காட்சிகளைப் பார்த்தபோது பத்தாண்டுகளுக்கு முன்னர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரரின் வாழ்க்கை அனுபவத்தை நான் சிறுகதையாக எழுதியிருந்தது ஞாபகத்துக்கு வந்தது.ஒரு டி.வி. நிகழ்ச்சிக்காக அந்த விடுதலை வீரரை நான் சென்னைக்கு வரக் கேட்டிருந்தேன். . அவருக்கு வயது எண்பதுக்கு மேல். உடல் தளர்ச்சி பெரிதாக இல்லாவிட்டாலும் கடும் மன தளர்ச்சியில் இருந்தார். சென்னைக்கு அழைத்து வந்தவர்கள் அவ்ருடைய பிள்ளையும் பேரனும். நிகழ்ச்சிப் பதிவு முடியும்வரை என் வீட்டில் தங்கியிருந்தார்கள். எல்லாம் முடிந்து ஊருக்குத் திரும்பும் தினத்தன்று ரயிலுக்குப் புறப்படுவதற்கு முன்னால் அவர் என் அறைக்கு பேரனுடன் வந்தார். என்னிடம் ஒரு உதவி வேண்டுமென்று தயங்கித் தயங்கிச் சொன்னார். என்னவென்று கேட்டேன் பேரனுக்கு சினிமாவில் சேர ஆசை. எப்படியாவது கமல்ஹாசனிடம் சொல்லி சேர்த்துவிடவேண்டுமென்று கேட்டார் ஆங்கிலேய ஆட்சியில் தேசத்துக்காகஅடி உதை அவமானங்களை சந்தித்திருந்த அந்த விடுதலை வீரர். ஏற்கனவே பல முறை பேரன் சென்னைக்கு வந்து முயற்சித்த கதையையும் சொன்னார். விடுதலை வீரருடன் ரயிலில் வந்தால் உடன் வரும் உதவியாளருக்கு டிக்கட் இலவசம் என்பது அரசு அளித்திருக்கும் சலுகை. எனவே அடிக்கடி இந்த விடுதலை வீரரை பேரன் சென்னைக்கு அழைத்து வந்து நாள் முழுக்க ரயில்வே நிலையத்திலேயே உட்காரவிட்டுவிட்டு, கோடம்பாக்கத்தில் வாய்ப்பு கேட்கப் போய்விடுவான். இரவு ரயிலில் ஊர் திரும்பும் வரை ரயிலடியில் விடுதலை வீரர் கிடக்க வேண்டியதுதான்.தள்ளு வண்டிக் கலைஞரை டெல்லிக் காட்சிகளை டி.வியில் பார்த்தபோது ஏனோ இந்த உண்மைக் கதை நினைவுக்கு வந்தது. ஒரு காலத்தில் மொழிக்காக, தமிழ் மக்களின் உரிமைக்காக, ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து டெல்லிக்கு எதிராகப் போராடிய இளைஞர், இன்று 84 வது வயதில் மகனுக்கும் மகளுக்கும் பேரனுக்கும் அமைச்சர் பதவி பெற்றுத் தருவதற்காக தள்ளு வண்டியில் வைத்து அலைக்கழிக்கப்படுகிறார். விடுதலை வீரருக்கும் இவருக்கும் ஒரே வித்யாசம், இப்படி அலைவது இவருக்கும் பிடித்திருக்கிறது என்பதுதான்.தி.மு.க என்பது திருக்குவளை மு.கருணாநிதி லிமிடெட் கம்பெனியாகிப் பல காலம் ஆயிற்று. கட்சி என்கிற கம்பெனியின் கண்ட்ரோலிங் ஷேர்ஸ் எல்லாம் குடும்பத்திடமே இருக்கின்றன. குடும்பத்தின் அடுத்தடுத்த தலைமுறைகள் வரிசையாக நிர்வாகப் பொறுப்புகளுக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். அதை ஒழுங்காக முடித்துத் தருவதற்காக ஓய்வு பெறும் வயதைத் தாண்டியபிறகும் போர்ட் சேர்மன் பதவியில் கலைஞரை தொடரவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.டி.வியில் பார்த்த டெல்லிக் காட்சிகளில் தள்ளு வண்டி ஊர்வலத்தில் பின்னால் போகிற பிரமுகர்களில் ஒரு பலியாடு மாதிரி முகத்தைப் பார்த்தேன். தெரிந்த முகமாயிருந்தது. வயதாகிவிட்டதால் கொஞ்சம் பின் வழுக்கையும், முன்புறம் வயதை மீறிய கருந்தாடியுமாக - திருச்சி சிவா! தி.மு.கவின் ராஜய சபை உறுப்பினர். ஸ்டாலினுடன் இளைஞர் தி.மு.க உதவி தளபதிகளில் ஒருவராகத் துடிப்புடன் செயல்பட்டு விஸ்வாசமாக சுமார் 30 வருடங்களுக்கு மேல் கட்சியில் இருக்கிறவர். புத்தகம் படிக்கிற ப்ழக்கமும், எழுதுகிற பழக்கமும் உடைய கண்ணியமான மனிதர். கட்சி அவருடைய விஸ்வாசத்துக்கு அளித்த உச்சமான பரிசு எம்.பி.பதவி மட்டும்தான். இந்த முறை அவருக்கு ஓர் இணை மந்திரி பதவியாவது தருவார்கள் என்று நினைத்தேன். ம்ஹூம். எம்.ஜி.ஆர் விஸ்வாசியாக இருந்து கல்வித் தந்தையாக மாறி அண்மையில் தி.மு.கவில் இனைந்து எம்.பியான கோடீஸ்வரர் ஜெகத்ரட்சகனுக்கெல்லாம் மந்திரி பதவி கொடுத்த பிறகு மீதி பதவி எதுவும் இல்லையே. மன்மோகன் சிங் குறைந்தது தி.மு.கவுக்கு பத்து இணை அமைச்சர் பதவிகளையாவது கொடுத்திருந்தால், சிவா மாதிரி அரசியல் அசடுகளுக்கும் வாய்ப்பு கொடுத்திருப்பார்களோ என்னவோ..மூத்த கட்சிக்காரரான டி.ஆர்.பாலுவை ஓரங்கட்டிவிட்டதாக பத்திரிகைகள் எழுதுகின்றன. இதில் ஒன்றும் வியப்பு இல்லை. பண்ணையார் வீடுகளில் எப்போதும் துடிப்பான புது இளம் கணக்குப் பிள்ளைகள் வந்துவிட்டால், வயசான பழைய கணக்குப் பிள்ளைகள் தாமாகவே குறிப்பறிந்து ஒதுங்கிக் கொள்வதுதான் மரபு. இன்னும் கொஞ்சம் கவுரமாக பாலுவுக்கு ஏதாவது மாநில ஆளுநர் பதவி வாங்கிக் கொடுத்து ரிட்டையர் ஆக்கியிருக்கலாம்.வாசிப்புப் பழக்கம், எழுதும் ஆற்றல், ஆங்கில அறிவு உடையவர்களை தேர்ந்தெடுத்து டெல்லிக்கு எம்..பிகளாக அனுப்பி தங்கள் கொள்கைகளுக்காக திறமையாக வாதாடக் கூடிய நபர்களை - அண்ணா, சம்பத், நாஞ்சில் மனோகரன் , இரா செழியன்,முரசொலி மாறன், டாக்டர் கலாநிதி, வைகோ போன்றோரை -- அனுப்பும் கட்சியாக இருந்த திமு.க இன்று எப்படிப்பட்டவர்களை அனுப்புகிறது ? யாரெல்லாம் அமைச்சர் ஆக்கப்படுகிறார்கள் ? எப்படி இருந்த தி.மு.க இப்படி ஆகிவிட்டது ? இன்னும் அடுத்த பத்தாண்டுகளில் என்னவெல்லாம் ஆகப்போகிறதோ ?நீ ஒன்றும் எங்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்று ஆவேசப்பட வேண்டாம். நீங்களேயாவது உங்களைப் பற்றிக் கவலைப்படுங்கள். என் கவலையெல்லாம் உங்களின் இலவச மயக்கங்களில் சிக்கியிருக்கும் மக்களின் கதியைப் பற்றித்தான்.-------------------------------------------------
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்று சர்ச்சைகள் தொடர்கின்றன. ப்லரும் என்னிடமும் தொலைபேசியில் கேட்கிறார்கள். எந்த உண்மையை நம்புவதென்று எனக்கும் தெரியவில்லை.
பிரபாகரன் இருக்கிறார் என்றால் இனி என்ன ஆகும் ? பிரபாகரன் இல்லை என்றால் இனி என்ன ஆகும் ? இந்த இரு நிலைகளையும் கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம்.பிரபாகரன் இருக்கிறார் என்றால், அவரை எவ்வளவு சீக்கிரமாக நெடுமாறனோ வைகோவோ சந்தித்து பேட்டி எடுத்து வெள்யிடுகிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது.
பிரபாகரன் தன்னைத்தானே மிகத் தீவிரமாக சுயவிமர்சனம் செய்துகொள்ள வேண்டிய நேரம் இதுதான். உலகத்தின் மிகத் திறமை வாய்ந்த ராணுவ தளபதிகள் வரிசையில் இடம் பெறக்கூடிய தனக்கு இப்போது பின்னடைவு ஏற்பட்டதற்கு என்ன காரணம் என்பதை அவர் சிந்திக்க வேண்டும். ராணுவ ரீதியான தவறுகளை விட, அரசியல் தவறுகள்தான் இந்த நிலைக்குக் காரணம் என்பதை அவர் புரிந்துகொள்ளவேண்டும்.இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இந்திய அரசு போராளிகளுக்கு ஆயுதப்பயிற்சி கொடுத்த போது இருந்த உலக அரசியல் இன்று இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். சோவியத் யூனியன் இல்லை. அமெரிக்கா ஒற்றை வல்லரசானது. அல்-கொய்தா தாக்குதல்களுக்குப் பிறகு அமெரிக்காவும் மேலை நாடுகளும் புலிகளை ஆதரித்ததை நிறுத்திவிட்டன. இந்தியா எப்போதுமே தனி ஈழத்தை ஆதரித்ததில்லை என்பதுவேறு எவரையும் விட பிரபாகரனுக்கு நன்றாகவே தெரியும்.நானும் பிரபாகரனும் ஒரே ஆண்டில் பிறந்தவர்கள் ஒரே வயதினர். 1983 முதல் 1992 வரை நானும் இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கு தனி ஈழம் ஒன்றுதான் தீர்வு என்று தீவிரமாக நம்பினேன். ஆதரித்து எழுத்திலும் பேச்சிலும் பிரசாரம் செய்தேன். இப்போது என் கருத்து மாறிவிட்டது.இன்று உலகில் எங்கேயும் எவரும் பிரிந்து போவதற்குப் போராடுவதை விட, சேர்ந்து வாழ்வதற்கான வழிமுறைகளை யோசிப்பதும் உருவாக்குவதும்தான் சிறந்த தீர்வு என்று நம்புகிறேன். ஆயுதப் போராளியான நெல்சன் மண்டேலாவை தன் ரோல் மாடலாக பிரபாகரன் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.பிரபாகரன் உயிரோடு இருப்பாரானால், மறுபடியும் ஆயுதப் போராட்டத்தை எப்படி வலுப்படுத்துவது என்ற யோசனைக்கு பதில், அரசியல் தீர்வு பற்றி யோசிக்கத் தொடங்க வேண்டும். மறுபடியும் ஆயுதப்போராட்டம் ஒரு ரொமாண்டிக் கனவாக இருக்க முடியுமே தவிர, இன்னும் பல தலைமுறை ஈழத்தமிழர்களை யுத்தத்தில் வன்முறையில் பலி கொடுபதில்தான் திரும்பவும் முடியும்.இலங்கையில் ப்கிரங்க அரசியல் கட்சியாக புலிகள் தம்மை அறிவித்துக் கொண்டு செயல்படத்தொடங்குவதற்கான வழிகளை பிரபாகரன் யோசிக்க வேண்டும். அதற்கான ஆதரவை உலக நாடுகளிடம் திரட்டும் வேலையில் உலகெங்கும் இருக்கும் ஈழத்தமிழ் ஆதரவாளர்களை ஈடுபடுத்த வேண்டும். இப்படிப்பட்ட மாற்றத்துக்கு இந்தியாவில் பெரும் ஆதரவு கிட்டும். இந்திய அரசும் இதை ஆதரிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை எளிதில் ஏற்படுத்த முடியும்.ஈழ மாநிலத்தின் முதலமைச்சராக பிரபாகரனும், எதிர்க்கட்சித்தலைவராக வரதராஜப்பெருமாளோ, டக்ளஸ் தேவானந்தாவோ, கருணாநிதி-ஜெயலலிதா போல அல்லாமல் இன்னும் அதிகத் தரத்துடன் அரசியல் செய்யும் ஜனநாயக அமைப்பை பிரபாகரன் நினைத்தால் இன்றைய சூழலில் உருவாக்கிக் காட்ட முடியும். ராணுவ வீரன் பிரபாகரனுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு அரசியல்வாதி பிரபாகரனாக தன்னை அதற்கு அவர் வடிவமைத்துக் கொள்ள வேண்டும். இதுதான் என் விருப்பம். மறுபடியும் ஈழத்தமிழர்களை யுத்தம் நோக்கி அழைத்துச் செல்லும் எவரும் உண்மையில் முழுமையான தமிழ் இன ஒழிப்பில்தான் அதைக் கொண்டு போய் முடிப்பார்கள்.பிரபாகரன் இறந்திருந்தால் ?அரசியல் தலைமைக்கு ராணுவ ஆற்றல் கட்டுப்பட்டால்தான் அரசு அமையும்; ராணுவ தலைமைக்கு அரசியல் அடி பணிந்தால், பாகிஸ்தானைப் போன்ற சீரழிவும் குழப்பமும்தான் ஏற்படும் என்ற நிரந்தரமான அரசியல் விதியைப் புறக்கணித்ததால் பலியானவர் பிரபாகரன் என்ற வருத்தத்துடன் அடுத்தது என்ன என்று யோசிப்போம்.இந்தியாவின் பொறுபும் இந்தியாவில் உள்ள நம்முடைய பொறுப்பும் உலக நாடுகளின் பொறுப்பும் இன்னும் கூடுதலாகின்றன. ரஜபக்‌ஷே அரசை குறைந்தபட்சம் 13வது சட்டத்திருத்த் ரீதியான் சம உரிமைகளை உடனடியாக நிறைவேற்றக் கட்டாயப்படுத்துவது மிக முக்கியமானதாகிறது. பல கட்சி ஜனநாயக அமைப்பை கிழக்கிலங்கையில் நிலை நிறுத்த உழைக்க வேண்டியிருக்கிறது.இதைச் செய்யாவிட்டால் ஈழத்தமிழர்கள் மறுபடியும் ஆயுதபோராட்டம் என்ற விஷச் சுழலில் போய் சிக்கி மறுபடியும் தற்காலிக வெற்றிகளையும் தொடர்ந்த அழிவுகளையும் சந்திக்கும் அவலம் ஏற்படும்.பிரபாகரன் இறந்திருந்தாலும் சரி, உயிரோடே இருக்கிறார் என்றாலும் சரி, உடனடியாக நம் அக்கறைக்குரிய வேலை, யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அனைவரும் சகஜ நிலைக்கு 6 மாதத்துக்குள் திரும்ப ஏற்பாடு செய்வேன் என்று ராஜ பக்ஷே ஐ.நாவிடம் சொல்லியிருப்பதை தினம் தினம் கண்காணித்து செயல்படுத்த எல்லா நிர்ப்பந்தங்களையும் ஏற்படுத்துவ்துதான். அதிக பட்சம் இனும் 15 நாட்களுக்குள் உலகத் தொண்டு நிறுவனங்கள் அனைத்தையும் நிவாரணப் பணி செய்ய அனுமதிக்கும்படி ராஜப்க்‌ஷே அரசை வலியுறுத்த வேண்டும். சிதைந்த நகரங்களை ஊர்களை கிராமங்களை மறுபடியும் எழுப்பும் வேலையை விரைவுபடுத்த வேண்டும் .


இவற்றைப் பற்றியெல்லாம் பேசாமல், மர்மக்கதை போல சர்ச்சைகளில் போய் சிக்குவது கூட அசல் பிரச்னையிலிருந்து திசை திரும்பும் வேலையாகிவிடும்..இந்த வாரப் பூச்செண்டு:வறுமை, நோய் போன்றவற்றை மீறி அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனைகள் செய்திருக்கும் பள்ளி இறுதியாண்டு, பிளஸ் டூ மாணவ சாதனையாளர்கள் அனைவருக்கும் இ.வா.பூச்செண்டு.இந்த வார நெகிழ்ச்சி:கனிமொழியின் ’தியாகம்.’

ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து உயிர் பிழைத்தாள் ஒரு அம்மணி (வீடியோ)

Monday, June 1, 2009

Newzealand was discovered by tamilians


Tamilians were very good at sea trade in the very even ancient times.Especially the contribution of people from Ramanathapuram district was commendable.A ship bell in Newzealand Museum exemplifies this fact.This bell found during 1836 at Vengeri in Newzealand contains the name of a Tamilian inscribed on it.This bell was founded by William Kolnso a Christian Pastor who had been sent from England to Newzealand for spiritual propagation along with his group."this bell belongs to the ship of Muhaideen Vakkas"is depicted in metal over the edge of the bell.This bell made completely out of bronze encloses 23 tamil letters.Based on these letters scholars consider that this bell belongs to 17th or 18th century.


Discovery of newzealand


This bell was founded earlier by Mauri ethnic tribes of Newzealand considering it as a vessel cooked potatoes with it.Seeing this the pastor exchanged the bell with a steel vessel.These information are available at the Newzealand Museum.but the fact that how the bell broke out from the ship and how long the tribes had been using it are unknown.Nevertheless the bell has been handed over to the Museum according to the pastor's will.Sea researchers from European continents discovered many new countries for commercial purposes.During 1769 James Cook of England , a sea researcher discovered Newzealand after the discovery of America and Australia.But before the British discovery of Newzealand Tamilians set up a footprint and also developed commercial pursuits in Newzealand.the ship bell found here serves as an example for the Tamilians' discovery of Newzealand.


This eminent bell is being claimed by 3 different regions of Tamilnadu.People of Vedalai and Maraikkayar Pattinam located near mandapam of Ramanathapuram district had been good ship traders as well as good commercial experts.O.M.S.M.Ummu Salma Beevi and her brother O.M.S.M.Syed Mohaideen say that the bell recovered in Newzealand belong to them.They say that Vakkas is the grandfather of their grandfather Sheikappa.They assert that Vakkas owned several ships and this bell could belong to one of the ships owned by him.Further the natives here have been naming their children as Vakkas for quite some time.Apparently the name Vakkas is not accustomed to any other parts of Tamilnadu.After Vakkas, his son muhaideen meerasa,his grandson sheikappa and his 5 sons had been living as ship traders is a well known fact for the people of this place.Similarly people of Kilakarai claim this bell as their own.According to this people King Habeeb Muhammed who ruled Kilakarai established a place called Maraikayarpattinam.It is proved from the document written by Mautharosupeetha,the then Madurai district collector to Abdul Khader Sahib Maraikkayar who is the brother of King Habeeb Muhammed.Initially it was called as Habeeb Muhammed Puram and later changed to Maraikkayar pattinam.Keelakkaraittes say that this bell belongs to one of the 40 ships of Keelakkarai Philanthropist Habeeb Maraikkayar.
Similarly Meer Muhammed Sabi and Jane De Mattudi of Pazhaverkadu near Chennai owned a ship previously.They named their ship as Muhaideen Bucks.This ship had been committed for commercial purposes from Pazhaverkadu and Nagapattinam harbours to far east countries like Australia and Newzealand.Therefore this bell probably belongs to that ship owned by Sabi and Mattudi,says eminent Archaeologist,Former head of Pudukkottai Museum and writer Raja Muhammed. Nevertheless this bell is claimed by 3 different regions of Ramanathapuram,it is adorning Tamilians' overseas trade as a crown for the progeny.Information about this bell is briefly available at http://www.maraicoir.blogspot.com/

Sunday, May 31, 2009

எழுத்தாளர் சகோதரி கமலா சுரய்யா மரணம்.


ஈரல் எழுத்துலகில் தன் வாழ்க்கையை ஆரம்பித்து ஆங்கில எழுத்துலகிலும் பிரகாசித்த 75 வயது நிரம்பிய பிரபல மலையாள எழுத்தாளர் சகோதரி கமலா சுரய்யா அவர்கள் புனேயிலுள்ள ஜஹாங்கீர் மருத்துவமனையில் இன்று அதிகாலை 2 மணிக்கு மரணமடைந்தார் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!1934 மார்ச் 31 இல் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்திலுள்ள நாலப்பாட்டு என்ற பெயர் கொண்ட குடும்பத்தில் பிறந்த சகோதரி கமலா சுரய்யாவின் தாயார் பிரபல பெண்கவிஞர் பாலாமணியம்மா ஆவார். தந்தை வி.எம். நாயர். கணவர் மாதவதாஸ். இவருக்கு 3 பிள்ளைகள் இருக்கின்றனர்.வாழ்வின் அனைத்து ஏற்றத்தாழ்வுகளையும் தன் வாழ்நாளில் அனுபவித்து விட்ட சகோதரி சுரய்யா, மாதவிக்குட்டி என்ற பெயரில் மலையாளத்திலும் கமலாதாஸ் என்ற பெயரில் ஆங்கிலத்திலும் பிரபலமாக அறியப்பட்டிருந்தவர். அவரது பல்வேறு நாவல்களும் ஆங்கிலக் கவிதைகளும் கமலா சுரய்யாவுக்கு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் எண்ணற்ற வாசகர்களைத் திரட்டித் தந்துள்ளது.பால்யகால ஸ்மரணகள் (குழந்தைக்கால நினைவுகள்), பூதகாலம் (இறந்தகாலம்), பக்ஷியுடைய மரணம் (பறவையின் மரணம், யா அல்லாஹ் போன்றவை சகோதரி சுரய்யாவின் பிரசித்திப்பெற்ற நாவல்களில் சில! கேரள சாகித்ய அகாதமி விருது, வயலார் விருது, எழுத்தச்சன் விருது போன்ற பல்வேறு எழுத்தாளர் விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். அன்பைத் தேடி பயணப்பட்ட அவரின் வாழ்வில், அவர் இறுதியாக தேடிய மழை போன்ற அன்பு இருக்கும் இடமாக இஸ்லாத்தைக் கண்டு கொண்டார். 1999 ஆம் ஆண்டு தன் 65 ஆவது வயதில் அவர் இஸ்லாமிய மார்க்கத்தைத் தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். அன்றோடு மாதவிக்குட்டி என்ற தன் இயற்பெயருக்கு விடைகொடுத்து, கமலா சுரய்யா என்றப் பெயருக்குச் சொந்தக்காரர் ஆனார்.

தேடியலைந்த நிரந்தர அன்பு பொங்கும் இடமாக இஸ்லாத்தைக் கண்டுகொண்ட நேரத்திலேயே, பிரபலமான நாயர் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் சமூகத்தில் தான் மிகப் பெரிய அந்தஸ்திலும் பெயரிலும் அறியப்பட்டிருந்தாலும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கு அவை ஏதும் அவருக்குத் தடையாக இருக்கவில்லை. அறிந்துக் கொண்ட உண்மையை ஏற்றுக் கொள்வதில் எவ்வித தயக்கமும் காட்டாத அவரது வெளிப்படையான கள்ளம் கபடமற்ற அந்தப் பண்பே பிந்தைய அவரின் வாழ்வில் மிகப் பெரிய சவால்களையும் எதிர்கொள்ள வைத்தது. இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்திற்காக அதுவரை மிகப் பெரிய அந்தஸ்தில் வைத்துப் போற்றிய சமூகத்திலிருந்து, சங்பரிவார வல்லூறுகள் அவர் மீது பாய்ந்து பிராண்டியன. கூடவே கொலை மிரட்டல்களும் தூற்றல்களும் அவரைத் தொடர்ந்தன! உடல் தளர்ந்திருந்தாலும் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துத் தான் தேடியதைப் பெற்றுக் கொண்ட அவரின் உறுதியான மனம் தளரவில்லை. பிற்காலத்தில் சகோதரி கமலா சுரய்யா அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் திகட்டிப்போய் அதிலிருந்து வெளியேறி விட்டார் என, அவர் சஞ்சரித்திருந்த பத்திரிக்கை உலகினரே எவ்வித வெட்கமும் இன்றி பொய் கதைகளை அவருக்கு எதிராக எழுதி, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்காக அவர் மீதான தங்களின் வெறுப்பைக் கொட்டித் தீர்த்தன. தொடர்ந்து வந்த வல்லூறுகளின் தூற்றல்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அவரின் இறுதி காலத்தில் அவர், தான் மிகவும் நேசித்திருந்த பிறந்த மண்ணை விட்டு மும்பை சென்று வாழ வேண்டிய நிர்பந்தத்திற்கும் தள்ளப்பட்டார். அவரை மிகவும் நேசித்திருந்த அவரின் இளைய மகன் ஜெயசூர்யாவுடன் தன் கடைசி காலத்தை புனாவில் நிம்மதியுடன் கழித்தார்.

கடந்த ஒன்றரை மாதக்காலமாக சுவாசக் கோளாறினால் பாதிக்கப்பட்டு, ஜஹாங்கீர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே எதிர்பாராத விதமாக இன்று அதிகாலை 2 மணிக்கு அவர் மரணமடைந்தார். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்! இன்று அவர் நம்மை விட்டுப் பிரிந்திருந்தாலும் இஸ்லாத்தை ஏற்றப்பின்னரான அவரின் கடந்த 10 ஆண்டு கால வாழ்வில் அவர் வெளிப்படுத்திய அவரின் மகத்தான எண்ணங்கள், இவ்வுலகை விட்டு நீங்காது! அவரின் எண்ணங்களில் சில: "அரசியல் கட்சிகளை அளவுகடந்து நேசிக்கும் மனிதர்களைப் பார்க்கிறேன்; மதத்தை அளவுகடந்து நேசிக்கும் மனிதர்களைப் பார்க்கிறேன்; ஆனால் மனிதத்தை நேசிக்கும் மனிதர்களைப் பார்ப்பது அபூர்வமாகி விட்டது!" "நான் தேடிய அன்பு இஸ்லாத்தில் கிடைத்தது. அதனை ஒரு போதும் இழக்க விரும்பவில்லை." "எனக்கு இஸ்லாம் பிடித்திருக்கிறது. அது சொல்கிற வாழ்க்கை எனக்குத் திருப்தியாக இருக்கிறது." "நான் முஸ்லிமாக வாழ்கிறேன். என் மூத்த மகன் புத்த மதத்தைத் தழுவியிருக்கிறான். என் இளைய மகன், ‘நீதான் எனக்கு மதம், கடவுள் எல்லாமே!’ என்று தாய்மையைக் கொண்டாடுகிறான். எல்லோரும் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் யாரும் யாரையும் தொந்தரவு செய்வதில்லை. யாரும் யாரையும் தாழ்வாகக் கருதுவதில்லை. என் வீட்டுக்குள் சாத்தியமான இந்த நிலை, என் நாட்டுக்குள்ளும் இருந்தால், இந்த கமலாதாஸ் வேறு ஏதாவது எழுதிக்கொண்டு இருக்கலாம்." "பெண்ணியம் பேசுவதாகச் சொல்லிக் கொண்டு, 'கர்ப்பப் பையை ஆணுக்கும் வையுங்கள்' என்று கோஷம் எழுப்புவது அறிவுடைமை ஆகாது.

ஆணுக்குச் சில இயல்புகள் இருப்பதைப் போலவே, பெண்ணுக்கும் சில இயல்புகள் உண்டு. இரு தரப்புக்குமான இயல்புகளில் உயர்வு, தாழ்வு இருக்கக் கூடாதே தவிர, இயல்பையே மாற்றுவேன் என்பது விபரீதமானது. தாய்மையைப் பெண்கள் கொண்டாட வேண்டும். அது ஆண்களால் நினைத்தாலும் பெற முடியாத அற்புதமான விஷயம். என் வாழ்நாளில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்த காலம் எதுவென்று கேட்டால், நான் முதன் முதலாக தாய்மை அடைந்த அந்த நாட்களைத்தான் சொல்வேன். இப்போது நினைத்தாலும் எனக்குள் சிலிர்ப்பு ஏற்படுத்துகிற அனுபவம் அது. அந்த இயல்புக்கு எதிராக நான் ஏன் செயல்பட வேண்டும்? அதனால்தான் பெண்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியவில்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒரு அம்மாவாக இருப்பதால், என் எழுத்துத் திறமை எந்த விதத்திலும் குறைந்துவிடவில்லை. பெண்ணியம் பற்றிய சிந்தனைகளில் நமக்கு இன்னும் தெளிவு வேண்டியிருப்பதாகவே கருதுகிறேன்." "நான் மதத்தை நம்புவதில்லை. ஆனால், கடவுளை நம்புகிறேன். இந்த உண்மையைச் சொன்னால், இரண்டு பக்கமிருந்தும் எதிர்ப்பு வருகிறது.எல்லோரும் உண்மை தங்கள் பக்கம் தான் இருப்பதாகச் சொல்கிறார்களே தவிர, உண்மையின் பக்கம் தாங்கள் இருக்க வேண்டும் என்று யாருமே நினைப்பதில்லை." கண்டுகொண்ட உண்மைகளை ஏற்றுக் கொள்வதற்கும் அதன்படி வாழ்வதற்கு எந்த மிரட்டல், உருட்டல்களுக்கும் அஞ்சாமல் அவர் காட்டிய உறுதியும் எவ்வித அச்சமும் இன்றி அசத்தியங்களுக்கு எதிராக அவர் தைரியமாக வெளியிட்ட எண்ணங்களும் என்றும் நம்மிடையில் அவரை நினைவுகூற வைக்கும். சகோதரியின் பிழைகளைப் பொறுத்து, அவர் தேடி அலைந்துப் பெற்ற நிரந்தர அன்பை நிரந்த வாழ்விலும் வழங்க இறைவன் கருணை புரியட்டுமாக! ஆமீன்.