Thursday, May 21, 2009

ஈழத் தமிழர்களுடன் எனது உறவு..

ஈழத் தமிழர்கள் யாவரும் எனது தொப்புள் கொடி உறவுகள் என்று ஒரு பொய்யான நடையில் இந்த பதிய விரும்பவில்லை. அவர்களுடனான எனது அனுபவங்களை எழுதுவது மட்டுமே எனது நோக்கம்.

நான் மண்டபம் முகாமிலுள்ள அகதிகள் முகாமில் தான் எனது ஐந்து வருடகால பள்ளி வாழ்க்கை ஒரு மின்னலை போல விரைவாகவே கடந்தது. 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் போது நான் பள்ளி மாணவர்கள் அனைவர் மத்தியிலும் நான் பரவலாக அறிமுகமாகி விட்டேன். காரணம் கட்டுரைகள், கவிதை என்று பத்திரிக்கைகளில் எனது படைப்புகள் வெளியாகும் பொழுதெல்லாம் அதனை பிரேயர்களில் அறிவித்து விடுவார் எனது தமிழாசிரியர். பிறகு கேட்க வேண்டுமா ஒரு ஹிரோ அந்தஸ்த்துடன் வலம் வந்த அந்த நாட்கள் திரும்பவும் கிடைக்காது.


என்னுடன் ஈழ மாணவ+மாணவிகள் 5 பேர்கள் படித்தனர். அவர்கள் யாவரும் என்னுடன் வயதில் மூத்தவர்களாக இருந்தனர். காரணம் இலங்கையில் 10 ஆம் வகுப்பு முடித்திருந்தால் இங்கே 8ஆம் வகுப்பில் தான் அவர்களுக்கு அட்மிஸன் வழங்குவார்கள். மற்றொன்று அவர்கள் நீண்ட நாட்கள் கழித்து தங்களின் பள்ளி வாழ்க்கையை துவங்கு பவராக இருப்பார்கள். வயதில் சிறிய வயது பசங்களோடு படிக்கிறோம் என்ற பள்ளியில் சேரும் புதிதில் இருக்கும். அதுவும் போகப் போக பழகியும் விடும். 

என்னுடைய ஈழ நண்பர்கள்  விளையாட்டில் சூரர்களாக இருந்ததால் எங்களோடு பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் பதக்க பட்டிய­ல் முன்னணியில் இருக்கும். பெரும்பாலும் முத்தையா முரளிதரன் தான் அவர்களின் ஆதர்சன நாயகனாக இருந்தார்.

ஒருநாள் அகிலேஸ்வரி என்ற சக மாணவி ''நீங்கள் கதை, கட்டுரை எல்லாம் எழுதுவீங்கள் தான்னே. ஏன் எங்களைப் பற்றியும், எங்களோட மக்களை பற்றியும் எழுதக் கூடாது'' என்று கேட்டார். நான் உங்களைப் பற்றி அறியாமையில் இருக்கிறேன் என்றும், உங்களைப் பற்றி சொல்லுங்கள் என்றும் கேட்டேன். உடனே அவர் அழது கொண்டே வகுப்பறை விட்டே ஓடி விட்டார். இதை பார்த்ததும் சக மாணவ, மாணவிகள் என்னை ஏதோ அனக்கோண்டா பாம்பை பார்க்கிற மாதிரி பார்த்ததும் ஒரு மாதிரியாகி விட்டது. விசயம் வகுப்பாசிரியர் வரை சென்று அவர் என்னை கூப்பிட்டு கண்டித்தனுப்பினார். 
ஒரு வாரம் கழிந்தது, அகிலா பள்ளி பக்கமே தலை காட்ட காணோம் என்பதால் ஏதோ குற்றம் புரிந்து விட்ட உணர்வு போல் உடம்பெல்லாம் அரித்தது. அப்போது தூரத்தில் அகிலா வருவது கண்ட உடனே நான் அவரிடம் சென்று ''மன்னித்து விடுங்கள். நான் ஏதாவது தவறுதலாக கேட்டு விட்டேனா என்றுக் கேட்டேன். இல்லை தவறு என்னோடு தான். நீங்கள் தான் என்னை மன்னிக்க வேண்டும். என்னால் அழகையை அடக்க முடியவில்லை. சிங்களவர்கள் என்னோட அக்காவை கற்பழித்துக் கொன்றேப் போட்டார்கள் என்று அவர் கூறியதுமே என்றதுமே எனது முதுகுத் தண்டு ஜில்­ட்டு விட்டது. 

நாங்கள் தாயகம் கிளம்புகிறோம். இப்ப சூழ்நிலை நல்லா இருக்கிறது. நோர்வே அரசு இரு தரப்பிலும் அமைதி பேச்சு வார்த்தை நடத்துகிறது. நீங்கள் எங்களோட மக்கள் அமைதியாக வாழ நீங்களும் பிரார்த்தனை செய்யுங்கள்'' கூறி சென்று விட்டார். 

(அகிலாவின் பிரிவிற்கு பின்னர் நான் முத­ல் மண்டபம் முகாமில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் உள்ள அவலங்களை எல்லாம் புகைப்படம் மெடுத்து அவற்றை கட்டுரைகளாக பத்திரிக்கைகளில்  வந்ததும், அவற்றுக்கான வரவேற்பு இருந்ததோடு ஒரு சில வசதிகளும் மண்டபம் அகதிகள் முகாமிற்கு கிட்டியது.அகிலா போன்றே மண்டபம் அகதிகள் முகாமில் ஏராளமானோர் நிரம்பி வழிந்ததை பின்னர் உணர முடிந்தது.)

பிரார்த்தனையோடு ஈழத்தில் என்ன தான் நடந்து வருகின்றது என்று எனது பள்ளிநாட்களில் இருந்து தற்போது கல்லூரி நாட்கள் வரையிலும் தொடர்ந்து கவனித்து வந்து கோண்டு தான் இருக்கிறேன். 

சமீபத்தில் நிகழ்ந்தாகச் சொல்லப்பட்ட பிரபாகரனின் மரணம் என்னை மிகவும் பாதித்த மரணங்களில் ஒன்று. சதாம் உசேன் தூக்கி­டப்பட்டபோதும், வீரப்பனை பிணமாக காட்டிய போதும் நான் இதே நிலைக்கு ஆளாகியதாக கருதுகிறேன். பு­கள் பொறுத்தவரை மலையக மக்களிடம் அவர்களுக்கும் உள்ள உறவு, காத்தான் குடி படுகொலைகள், மூதூர் படுகொலைகள் பற்றி எல்லாம் எனக்கு மாற்றுக் கருத்துக்கள் உண்டு. அவற்றைப் பற்றி விரிவாக எழுதுவதற்கான நேரம் இது இல்லை.

இன்று அகிலா என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று எனக்குத் தெரியாது? ஆனால் அவருக்காக எனது பிரார்த்தனைகள் எப்போதும் உண்டு.