Thursday, April 9, 2009

பேட்டி கொடுக்கும் தலைவர்கள் ஷு அடியில் இருந்து தப்பிப்பது எப்படி? டிப்ஸ்



அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் ஈராக் விஜயத்தின் பொழுது முன்ததர் என்ற பத்தரிக்கையாளர் தனது இரண்டு காலணிகளையும் எறிந்து ஒட்டு மொத்த ஈராக் மக்களின் சார்பில் தனது கோபத்தை வெளிப்படுத்தினார். இன்று அவருக்கு ஈராக் அரசு மூன்றாண்டு சிறை தண்டனையும் வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து சீன அதிபர், இஸ்ரேல் தூதர்,  நமது இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ப. சிதம்பரம் என இந்த லிஸ்ட் தொடர்கின்றது. எனவே இனிமேல் இத்தகைய ஷு தாக்குத­ல் இருந்து தப்பிக்க ஏதோ என்னால் ஆன சில டிப்ஸ்கள்.

கிரிக்கெட் விக்கெட் கீப்பர்களை உடன் வைத்திருப்பது உடம்புக்கு நல்லது. (டோனி மட்டும் வேண்டாம்)

மிகப்பெரிய கண்ணாடித் தடுப்புக்குள்ளே இருந்து இருந்து பேட்டி அளிக்கலாம். ஷு எதேனும் பறந்து வந்தாலும் கண்ணாடி தடுத்து விடும். (புல்லட் புருப் கண்ணாடிகளாக இருந்தால் மிகவும் நல்லது)

பத்திரிக்கையாளர்கள் யாரும் ஷு அணிந்து வந்தால் பேட்டி தரமாட்டேன் என்று குழந்தை போன்று அழுதால் நிச்சயம் அதுவும் பரபரப்பாகும்.

பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது குறைந்தது பேட்டி அளிப்பவருக்கும் பத்திரிக்கையாளருக்கும் குறைந்தது 30 அடியாவது இடைவேளை இருப்பது நல்லது. அப்போது தான் ஷுக்கள் பறந்து வந்தால் விலகிக் கொள்ள ஏதுவாக இருக்கும். 


யாரேனும் லட்டர் பேடு இயக்கங்களின் தலைவர்கள் பிரபலம் ஆக வேண்டும் என்றால் பத்திரிக்கையாளர் சந்திப்பினை ஏற்பாடு செய்து அதில் தன் மீது ஷுவை எறியச் சொல்­ பிரபலம் ஆகலாம். (டி. ராஜேந்தர், கார்த்திக், சரத்குமார், பி.ஜே ஆகியோர் முயன்று பார்க்கலாம்)