Tuesday, April 7, 2009

சிதம்பரத்திற்கு ஷு அடி -முன்ததருக்கு 3 ஆண்டு சிறை



ஒரு காலணியால் உலகப் புகழ் பெற்றவர் முன்ததர் அல் ஜைதி. ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்க முன்னாள் அதிபரின் ஈராக் இறுதி விஜயத்தின் போது முன்ததர் அல் ஜைதி தனது காலணியை கழற்றி வீசி இது உனக்கு கடைசி வழியனுப்புதல் என்றும் முதல் காலணி ஈராக்கை ஆக்கிரமித்ததற்காக, இரண்டாம் காலணி தாக்குதல் ஈராக்கில் அமெரிக்க ராணுவத்தினரால் கொன்று தீர்க்கப்பட்ட பெற்றோர்களுக்காக, அநாதைகளுக்காக என்றும் சொல்லி அடித்திருக்கிறார் இளைஞர் முன்ததர்.
முன்ததர் அல் ஜைதியின் இந்த செயல் அமெரிக்க ஆதரவு நாடுகளி டையே அதிர்ச்சியையும் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை யும் ஏற்படுத்தியதுஅமெரிக்க அதிபர் மீது தாக்குதல் நடத்திய வழக்கின் விசாரணை நீதி மன்றத்தின் முன் வந்தது. முன்ததர் அல் ஜைதிக்கு மூன்றாண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.டிசம்பர் 14 சம்பவம் என வரலாற்றில் அழைக்கப்படும் இந்த சம்பவம் தொடர் பான வழக்கு, விசாரணைக்கு வந்த போது நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு போடப் பட்டது நீதிபதி அப்துல் ஆமிர் ஹசன் தீர்ப்பினை வாசித்தார்.உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டி ருந்த பசுமைப்பகுதியில் முன்ததர் அல் ஜைதியின் உறவினர்கள் 200 பேரும் செய்தியாளர்களும் நீதி மன்றத்தில் நிறைந்திருந்தனர்.


சர்வதேச அளவில் புகழ் பெற்ற முன்னணி வழக்கறிஞர்கள் 25 பேர் நீதிமன்றத்தில் முன்ததருக்காக ஆஜராகியிருந்தனர்.முன்ததர் அல் ஜைதி சாதாரண குற்றவாளி அல்ல. அவர் ஒரு போர்க் குற்றவாளி. எனவே அவர் மீதான நட வடிக்கையின் முடிவு பிரதமர் அலுவ லகத்திலிருந்து எடுக்கப்பட்டது என ஈராக் அதிகார வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.எந்த சுதந்திர குடிமகனும் இதனையே செய்வான். தான் ஒன்றும் தவறாக செய்து விடவில்லை என ஷூ வீரன் முன்ததர் தெரிவித்தார். புஷ்ஷுவை தாக்குவதற்கு முத­ல் ஒரு ஷூவை தான் வீசியதாக வும் அது அவர்மீது படாததால் மறு ஷூவை வீசியதாகவும் புஷ்ஷை கொலை செய்யும் நோக்கம் தனக்கு இல்லை என்றும் முன்ததர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். முன்ததர் மீதான தண் டனையை நீக்கக் கோரி அரபுலகம் எங்கும் போராட்டம் வலுத்து வருகிறது.எங்கள் நாட்டை அழித்ததோடு மட்டுமல்லாமல் வழியனுப்பு விழாவிற்கும் வந்து ஏர்ர்க் க்ஷஹ்ங் ஒழ்ஹய் என புஷ் கூறியது தனது கோபத்தை அதிகரித்ததாக முன்ததர் கூறினார்.எது எப்படியோ புஷ், ஷூ, முன்ததர் என மூன்று அம்சங்களுமே சரித்திரத்தில் இடம்பெற்றுவிட்டன.
இந்தப் பதிவை பதிவிடும் பொழுது நமக்கு கிடைத்த தகவல் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் இதே நிலமை ஏற்பட்டுள்ளது.
\\இந்தப் பதிவை பதிவிடும் பொழுது நமக்கு கிடைத்த தகவல் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் இதே நிலமை ஏற்பட்டுள்ளது.\\