Thursday, January 13, 2011

முஸ்லிம்களோடு மோதும் சிறுத்தைகள்-பேரணாம்பட்டில் தகுந்த பாடம்

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நகரத்தில் இஸ்லாமியர்கள் கணிசமான அளவில் வாழ்ந்து வருகிறார்கள். இங்கு முஸ்லிம்களும், தலித்களும் ஒற்று மையோடு வாழ்ந்து வருகிறார்கள், இந்த ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக விடுதலை சிறுத்தை கட்சியின், தமிழ் தேசிய பேரவை, வடக்கு மாவட்ட செயலாளரான வேதாச்சலம் என்பவர் தொடர்ந்து கடந்த 2 வருடங்களாக முஸ்லிம்கள் மீது அராஜகப் போக்கை மேற்கொண்டு வந்தார், குறிப்பாக முஸ்லிம் சமுதாயத்தை இழிவாகப் பேசுவ தும், முஸ்லிம் பெண்களை அநாகரீகமாகப் பேசியும் வந்தார்.

இதன் உச்சக்கட்டமாக 16.12.10 வியாழன் அன்று மாலை 6.30 மணியளவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேரணாம்பட்டு நகராட் சியின் புதிய கட்டட அலுவலகத்தில் நுழைந்த வேதாச்சலம், புதிய கட்டடத் திறப்பு விழாவிற்கு வருகை தரவுள்ள துணை முதல்வர் மு..ஸ்டாலின் நிகழ்ச்சியின் நோட்டீசில் என் பெயர் ஏன் இல்லை? என்று கேட்டவாறே அங்கி ருந்த திமுகவை சேர்ந்த முஸ்லிம் கவுன் சிலரான முன்னா என்பவரைத் தாக்கியது மட்டுமில்லாமல், அங்கிருந்த மற்ற முஸ்லிம் களையும் தன்னுடைய கூட்டாளிகளோடு சேர்ந்து கொலை வெறியோடு தாக்கியுள்ளார், அதன் பின்னர் வெளியில் வந்த வேதாச் சலம் பொது இடத்தில் முஸ்லிம்களை அறுவருப்பான வார்த்தைகளில் திட்டினார். இதனைத் தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் காவல்துறையிடம் முறையிட்ட போது நடவடிக் கை எடுக்காமல் காலம் தாழ்த்தியதால், கோபம டைந்த பொதுமக்கள் நூற்றுக்கணக்கில் ஒன்று திரண்டு சாலையில் வந்து போராடிய போது, சிறு கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது.

உடனடியாக வேதாச்சலத்தை கைது செய்யவில்லை என்றால் 18.12.10 அன்று வருகை தரவுள்ள மு..ஸ்டாலினுக்கு கருப்பு கொடி காட்டும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது, அதன்பின் மாவட்ட கண்காணிப்பாளர் திரு.அன்பு அவர்களை சந்தித்து உடனடியாக வேதாச்சலத்தை கைது செய்ய வலியுறுத்தப்பட்டதுடன், அப்பாவி களை விடுதலை செய்யவும் வலியுறுத் தினர். இதே நேரத்தில் தமுமுக பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி அவர்க ளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரிகளை பொதுச்செயலாளர் அவர்கள் தொடர்பு கொண்டு பேசினார், தொடர்ந்து பொதுச் செயலாளரின் ஆலோசனையை பெற்று மாவட்ட நிர்வாகிகள் செயல்பட்டனர். இதைத் தொடர்ந்து அன்பு அவர்கள் வேதாச் சலத்தை மிக விரைவில் கைது செய்வ தாகவும், அப்பாவிகளை விடுதலை செய்து விடுவதாகவும் வாக்குறுதி அளித்தார்.

இவருடைய வாக்குறுதியை நீண்ட ஆலோசனைக்குப்பின் ஏற்றுக்கொண்ட நிர்வாகிகள், அறிவித்த கறுப்புக் கொடி காட்டும் ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டனர். அதன் பின் கைது செய்யப்பட்ட 8 பேரும் இரவு 1.00 மணிக்கு விடுதலை செய்யப்பட்டனர். ஊரும் அமைதியானது.

தொடர்ந்து தமிழகமெங்கும் விடுதலை சிறுத்தைகள் சமீபகாலமாக முஸ்லிம் பகுதிகளில் அராஜகம் செய்வதும், முஸ்லிம் களையே தாக்குவதும் பெருகி வருகிறது. திருமாவளவனும், வன்னியரசும் தங்கள் கட்சியினரை கட்டுப்படுத்துவார்களா?