Thursday, May 7, 2009

தனுஷ்கோடியில் ஏன் வலை பதிவர் சந்திப்பை நடத்த வேண்டும்?



தனுஸ்கோடி ஒரு அழிந்த பூமி. ராமேஸ்வரம் தீவின் வால் பகுதி. இன்று தனுஸ்கோடியின் பெயர் அதிகம் ஊடகங்களில் தென்படுகின்றது என்றால் அதற்கு காரணம் நிச்சயமாக இலங்கையில் இருந்து தாயகம் திரும்பும் தமிழர்களை வரவேற்பதே இந்த புதைந்த பூமிதான்.




சரி தலைப்பிற்கு வருகிறேன். தமிழ் கூறும் நல்லுகின் வலைப் பதிவர்கள் பல்வேறு இடங்களில் கூடி வலை பதிவர் சந்திப்பு என்று கும்மியடித்திருக்கலாம். ஆனால் ஒரு போராட்டமாக ஏன் வலை பதிவர்களின் சந்திப்பை தனுஷ்கோடியில் நடத்தக் கூடாது?சந்திப்பின் முக்கிய நோக்கமே இலங்கை தமிழர் பாதுகாப்பு. (தனுஷ்கோடி தான் இலங்கைக்கு மிக அருகில் இருக்கக் கூடிய தேசம்.. இராமேஸ்வரத்தில் சினிமா உலகத்தினர் நடத்தியப் பேராட்டம் கவனத்திற்குரியது)




சரி இதனை ஏன் வலைபதிவர் நடத்த வேண்டும் என்றுக் கேட்டால் '' நாம் வெறுமனே வலைப் பூக்களில் எழுதிக் கொண்டே இருப்பதைக் காட்டிலும் இது களத்தில் இறங்கிப் போராடுவதற்கு சமம்.




சரி நான் ஆரம்பித்து வைத்திருக்கிறேன். இதனைப் பற்றி நீங்களும் இடுக்கைகளை இட்டு கருத்துக்களைப் பரப்புங்கள்.