Friday, May 8, 2009

அரசியல் கட்சி துவங்கி லாபகரமாக நடத்துவது எப்படி? டிப்ஸ்.. டிப்ஸ்..


இன்றைய தினத்தில் மிகவும் லாபகரமான தொழில் என்றால் அரசியல் நடத்துவதுதான் என்பதை சிறு குழந்தை கூட சொல்லிவிடும். அப்படிப் பட்ட லாபரமானத் தொழிலை நடத்துவதற்கு ஏதோ என்னால் ஆன டிப்ஸ்.


முதற்கட்டமாக கட்சிக்கு பெயர் வைத்தே தீர வேண்டும். அதில் முன்னேற்ற, தேசிய, கழக என்ற வார்த்தை கண்டிப்பாக இருக்க வேண்டும்.


கட்சின்னு இருந்தால் கொடி வேண்டுமே. கவலையை விடுங்கள் உலகம் நாடுகளின் கொடியில் தங்களுக்கு எது பிடித்திருக்கிறதோ அதனையே உங்கள் கொடியாக சொல்லிவிடுங்கள். உதாரணத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற கட்சி (பி.ஜே) துபாய் நாட்டின் கொடியைவே தனது அமைப்பின் கொடியாக வைத்துள்ளது.


அப்புறம் கட்சி ஆரம்பித்து விட்டால் மக்களுக்கு சொல்ல வேண்டாமா. உடனே பத்திரிக்கையாளர்களை வசமாக கவனித்து ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திடல் வேண்டும். முடிந்தால் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஷு எரியச் சொன்னால் உடனே பிரபலம் ஆகி விடும்.


முடிந்தால் தினமும் பத்திரிக்கை அறிக்கை விட வேண்டும். பத்திரிக்கை அறிக்கை விடும் பொழுது 99 சதவீதம் ஆளும் கட்சியை ஆதரித்தே விட வேண்டும். இல்லையென்றால் வீட்டிற்கு ஆட்டோ வரும் தலைவரே.


கட்சின்னு ஆரம்பித்தாச்சு அதற்கு ஒரு வெப்சைட் இல்லாமலா. வெறும் வெப்சைட்டை மட்டுமே வைத்துக் கொண்டு கட்சி நடத்துவது பற்றி தோழர். முகவைத் தமிழன் மற்றும் நடிகர் விஜய டி.ராஜேந்தரை தொடர்பு கொண்டால் கூடுதல் டிப்ஸ் கிடைக்கும்.சரி அரசியல் நடத்துவதற்கு ஏதாவது போராட்டம் நடத்த வேண்டுமே. இல்லையென்றால் அரசியல் எதிர்காலம் என்ன ஆவது. ஆகவே உடனே ஏதாவது காரணத்தை சொல்லி போராட்டம் நடத்தலாம். போராட்டத்திற்கு கண்டிப்பாக பத்திரிக்கையாளர்கள், போலிசார்கள் போக குறைந்தது 20 பேராவது இருப்பது நலம். காரணம் கேட்டால் வங்க கடல் வத்திப் போணதற்கு ஆளும்கட்சியும்லிஎதிர்கட்சியும் தான் காரணம் என்று குற்றச்சாட்டுகளை அடுக்குங்கள்.அப்புறம் என்ன கொஞ்சம் கொஞ்சமாக உங்களின் கட்சி அதி பிரபல்யம் அடைந்தவுடன் உங்களை பிரபல தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளில் அடிக்கடி நேர்காணல்களில் இடம் பெறவீர்கள். தேர்தல் வந்தால் உங்களுக்கு பிடித்த கட்சியில் சீட் கேளுங்கள். தர மாட்டார்கள். கண்டிப்பாக இதயத்தில் இடம் இருப்பதாக கூறுவார்கள். ஆகவே தனித்து நில்லுங்கள்.