Thursday, April 2, 2009

மனிதநேய மக்கள் கட்சி யாருடன் கூட்டணி?




இன்று தமிழக மக்களின் பில்­யன் டாலர் கேள்வியாக இருப்பது மனிதநேய மக்கள் கட்சி யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்பதே. கட்சி ஆரம்பித்து சரியாக ஐம்பது நாட்களே நிறைவடைந்த வேலையில் இத்தகைய கேள்வியலைகளை ஏற்படுத்தியுள்ளது.


வரும் சனிக்கிழமை (04.04.2009) அன்று மனிதநேய மக்கள் கட்சியின் செயற்குழு கூடி அது தனது நிலைபாட்டை அறிவிக்கவுள்ளது.


திமுக கூட்டணியில் இதுவரையிலும் இருந்து வந்த தமுமுக (தமிழ்நாடு முஸ்­லிம் முன்னேற்றக் கழகம்) மனிதநேய மக்கள் கட்சியை ஆரம்பித்த நாளி­ருந்தே ஒரு தொகுதியை ஏற்க மாட்டோம் என்றே சொல்­லி வந்துள்ளது. தற்போது திமுக கூட்டணியில் இருந்து முற்றிலும் வெளியே வந்து விட்டது என்றே எண்ணத் தோன்றுகிறது.


இனி மனிதநேய மக்கள் கட்சி என்ன செய்யும்?


முதலாவதாக வக்ஃபு வாரிய தலைவர் பதவியை ராஜினாமா செய்யும்?


முதலாவதாக, வக்ஃபு வாரியத்தில் இருந்து செ. ஹைதர் அ­லி ஆற்றிய பணிகளை நிச்சயம் பாராட்டியே தீர வேண்டும். வக்ஃபு வாரியம் போனால் என்ன? வக்ஃபு சொத்துக்களை மீட்பதை தமுமுகவால் திமுக கூட்டணியில் இருந்து தான் செய்ய வேண்டும் என்றில்லை வெளியில் இருந்தே செய்யலாம்.


இனி அதிமுகவுடன் மனிதநேய மக்கள் கட்சி கூட்டணி வைத்துக் கொள்ளுமா?


கூட்டணி குறித்து அதிமுகவும் மனிதநேய மக்கள் கட்சியுடன் பேசி வருவதாக பிபிசிக்கு தமுமுக தலைவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருக்கிறார். ஆனால் அதிமுகவுடன் கூட்டணி வைப்பதால் தமுமுகவின் இமேஜ் ஏதேனும் சேதமடையுமா என்று தோன்றலாம். ஆனால் திமுகவை விட அதிமுகவில் அதிக இடம் கிடைக்குமானால் மனிதநேய மக்கள் கட்சி அங்கு செல்வதை யாரும் குறை சொல்ல முடியாது. ஏனெனில் திமுக, அதிமுகவின் தேர்தல் வெற்றி வாய்ப்பு என்பது தற்போதுள்ள சூழ்நிலையில் ஒரே மாதிரியாக தான் உள்ளது.


மனிதநேய மக்கள் கட்சி தனித்து நின்றால் என்ன?


என்றும் பரவலாக இன்று பேசப்பட்டு வருவதையும் நம்மால் உணர முடிகிறது. தனித்து நின்றால் சரியாக ஒரு தொகுதிக்கு குறைந்தது ஒரு கோடியாவது செலவிட வேண்டும். (திருமங்கலம் இடைத்தேர்த­ல் 100 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாம்) களப்பணியில் கை தேர்ந்த தமுமுகவினர் பன்மடங்கு உழைத்தால் விஜயக்காந்தை கூட பின்னுக்கு தள்ளிவிடலாம். தங்களின் பலத்தை அரசிற்கும் இதர தரப்பினருக்கும் உணர்த்திடலாம். இறுதியாக, அரசியலுக்கு குழந்தையான மனிதநேய மக்கள் கட்சி குழந்தை பருவத்திலேயே பிரபலமாகுமா அல்லது சிறிது காலம் ஆகுமா என்பதை காலம் தான் பதில் சொல்லும்.


உங்களின் கருத்தினை இங்கே உள்ள கருத்துக் கணிப்பில் தெரிவித்து செல்லவும்