Wednesday, April 29, 2009

தூள் கிளப்பும் மது விற்பனை: கொண்டாடும் அரசு! கொதிப்பில் மக்கள்!!


தேர்தல் வேகத்தில் பிரச்சாரம் சில மேடைகளில் அத்துமீறும், வன்முறை எண்ணங்களும் முகாமில் கூத்தாடும். தேர்தலுக்குத் தேர்தல் மனித மாண்பு களுக்கு மரியாதை குறைந்து வருகிறது. தனிநபர் தாக்குதலும், காது கூசவைக்கும் தீய வசன சவால்களும் மேடைக்கு மேடை பிரயோகிக்கப்பட்டு அப்பாவி வாக்காளர் களின் காதுகள் கிழிபடும்.அதற்கெல்லாம் முக்கியக் காரணங்களில் தலையாய இடத்தைப் பிடிப்பது போதை வஸ்துக்களை பயன்படுத்துவது பரவலாகிப் போனதுதான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதற்கு அரசாங்கம் வழங்கும் ஒத்துழைப்பு இருக்கிறதே அப்பப்பா சொல்­ மாளாது.தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் முதல் இன்றுவரை தமிழகம் முழுவதிலும் உள்ள டாஸ்மாக் கடைகளில் சராசரியாக விற்பனை 6 முதல் 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக கூறுகிறார்கள். தேர்தல் தேதி நெருங்கி வருவதாலும், பிரச்சாரம் பரபரப்படைந்து வருவதாலும் தேர்தல் களம் சூடுபிடித்து வரும்போதும் மேலும் 30 சதவீதம் வரை டாஸ்மாக் விற்பனை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.தமிழ்நாட்டில் 6 ஆயிரத்து 287 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளுக் குத் தேவையான சரக்குகளை சேகரித்து வைக்க தமிழகம் முழுவதும் 41 சரக்ககங் கள் உள்ளன. மதுவில் மயங்கிக் கிடப் பவர்களின் தாகத்தைத் தீர்க்கும் வகையில் தற்பொழுது ஒன்பது பெரிய நிறுவனங்களிடம் மதுபானங்கள் வாங்கப் படுகின்றன. அரசின் டாஸ்மாக் கடைக ளுக்கு சரக்குகளை சப்ளை செய்ய மேலும் இரண்டு பெரிய நிறுவனங்களும் விருப்பம் தெரிவித்துள்ளன. இதுமட்டு மின்றி வெளிநாட்டு மற்றும் இந்தியத் தயாரிப்பு மதுபான வகை மூலம் தினமும் 60 கோடியே 82 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அளவுக்கு விற்பனையாகிறதாம்.அதாவது, மாதம் ஒன்றுக்கு டாஸ்மாக் கடைகளின் மூலம் 6 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தமிழக அரசுக்கு லாபம் கிடைக் கிறது. அத்தோடு 40 சதவீதம் நேரடி வரி கிடைக்கிறது.தேர்தல் பரபரப்பில் கடமை யாற்றும்(!) அரசியல் ஊழியர் களின் உற்சாக பானத்தினால் இந்த மாதத்தில் மட்டும் கூடுதலாக 400 கோடி ரூபாய் வரை லாபம் கிடைக்கும் என அதிகார மட்டத்தில் ஆவ லோடு எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நேர 'கன ஜோர்' வியாபாரத்தைக் கருத்தில் கொண்டு குடிமகன்களை நன்றாக கவனிக்கவும் 'ஜில் பீர்' வழங்கவும் விசேஷ கவனம் செலுத்த வேண்டும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் தனது ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாம்.தேர்தல் காலத்து வன்முறைகளில் பெரும் பங்கு வகிப்பது மதுபானங்களை அதிகமாக அருந்திவிட்டு நிதானமிழப்பது தான். இருப்பினும் மதுபானத்தில் லாபம் கிடைப்பதுதான் தங்களின் ஒரே குறிக் கோள் என இயங்கும் அரசை என்ன வென்று சொல்வது. மதுவென்னும் கொடி தீமையை அறவே ஒழிக்க, மனிதநேய மக்கள் கட்சிக்கு வாக்களிப்பது மட்டுமே உடனடி தீர்வாகும்.


அபூசாலிஹ்