Friday, April 3, 2009

கூலிக்கு வேலை செய்யும் முன்னாள் எம்.எல்.ஏ



கோடிக்கணக்கில் பணம் கொடுத்து சீட் வாங்குவது, பின்னர் கோடிக்கணக்கில் செலவழித்து தேர்தலில் ஜெயிப்பது என்று சட்டமன்றமும் நாடாளுமன்றமும் பணக்காரர்கள் மிதிக்கும் படிக்கட்டுளாக மாறிவிட்டன. ஆனால் 35 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் பிரதிநிதியாக இருந்த சுக்கா பகதாலு தன் கணவருடன் சேர்ந்து தினமும் 60 ரூபாய் என கூலிக்கு வேலை செய்கிறார் என்றால் நம்பமுடிகிறதா?


சுக்கா பகதாலு ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் இப்போது அவருக்கு வயது 64. 1972 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் பாட்டபட்ணம் தனித் தொகுதியில் இருந்து ஆந்திர சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 27. 1977ஆம் ஆண்டு தேர்தலில் அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சுக்கா ரானார் 1967 மற்றும் 1972லிகளில் மட்டும் தனித் தொகுதி யாக இருந்த பின்னர் 1977 சட்டமன்றத் தேர்தலில் பாட்ட பட்ணம் பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டது. தலித் பெண்ணான சுக்காவுக்கு அங்கு போட்டியிட முடிய வில்லை. எனவே, ஸ்ரீகாகுலத்தில் பால கொண்டற தொகுதி யில் 1978ல் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால் 1977ல் காங்கிரஸ் ஆட்சியின் அவசர நிலை கால சட்டத்தினால் மக்கள் நொந்து போயிருந்ததால் 1978 தேர்தலில் சுக்கா தோற்க நேர்ந்தது. தற்போது முன்னாள் எம்.எல்.ஏக்களுக்கான ஓய்வூதியம் பெற்றுவருகிறார்.


சுக்காவுக்கு மூன்றும் பெண் குழந்தைகள். மிகப்பெரிய கடன் சுமையில் விழுந்த சுக்கா கணவருடன் தினக் கூலிக்கு வேலை செய்து வருகிறார். தற்போது ஆந்திரப் பிரதேசம் வடக்கு கடற்புறமான ஸ்ரீகாகுலத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான முக்தாபுரத்தில் நிலம் தோண்டி மண்ணை வெளியேற்றும் பணி செய்து வருகிறார், 64 வயதிலும் சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்.


தற்போது கூறை வேயப்பட்ட வீடு ஒன்றில் வாழ்ந்து வருகிறார் சுக்கா. மழை வந்தால் வீடு ஒழுகும். இருப்பி னும் தற்போதும் சுக்கா, காங்கிரசுக்கு விசுவாசமாகவே இருந்து வருகிறார்.


1972ல் ஆந்திர சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் உறுப்பினர்களில் நானும் ஒருத்தி எனக் கூறும் சுக்கா, இந்திரா காந்தியை தனது முன்மாதிரி என்று குறிப்பிடுகிறார். தலைவர்கள் சுயநலமில்லாதவர்களாக இருக்க வேண்டும் என்கிறார். தற்கால அரசியல்வாதிகள் பணத்தை பின்புலமாக கொண்டுள்ளார்கள் என்கிறார் சுக்கா.


தற்போது பாட்டபட்டணம் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான சத்ருசார்லா விஜயராமராஜு, வனத்துறை அமைச்சராக உள்ளார். சமீபபத்தில் தனது கிராமத்துக்கு வந்த அமைச்சரிடம் தனது ஒழுகும் வீட்டை காட்டியுள் ளார் சுக்கா. வீட்டை சீரமைக்க உதவுவதாக அமைச்சர் கூறி சென்ற போதிலும் இதுவரை அமைச்சரும் திரும்பி வந்ததில்லை வீட்டை சரி செய்யவும் உதவவில்லை என்கிறார் சுக்கா.

நன்றி: www.tmmk.in