Tuesday, April 28, 2009

தோல்வி பயத்தில் தயாநிதிமாறன்?மத்திய சென்னையில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் தயாநிதிமாறனுக்கு கடும் போட்டியாக மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் செ.ஹைதர்அலி இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறு கின்றனர். தயாநிதிமாறனின் பிரச்சாரத் திற்கு ஈடு கொடுக்கும் வகையில் ஹைதர் அலியின் பிரச்சாரமும் படு வேகமாக இருக்கிறது. மத்திய சென்னையின் சந்து பொந்துகளிலெல்லாம் ம.ம.க வேட்பாளரின் பிரச்சார வாகனம் நுழைந்து வருகிறது. பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் செல்ல தயங்கும் குடிசைப் பகுதிகளில் கூட ம.ம.கவினர் பிரச்சாரத்திற்கு சென்று ஒட்டு வேட்டையாடி வருகின்றனர்.

தேர்தல் அறிவிக்கப்பட்டு தயாநிதி மாறன் தி.மு.கவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னால் அவருக்கு எதிராக நின்றால் தோல்வியைத்தான் தழுவ வேண்டும். அந்தளவுக்கு பண பலம் உடைய தயாநிதி மாறனை எதிர்ப் பது கடினம் என்று அதிமுக உட்பட அனைத்து கட்சிகளுமே தயங்கி நின்றன. அ.தி.மு.க சார்பில் எஸ்.எஸ். சந்திரன் அறிவிக்கப்பட்டார். ஆனால் அவரும் ''தேவையில்லாமல் இறக்கி விட்டார்களே'' என்று புலம்பி வந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளராக ஹைதர் அலி  களமிறங்கியவுடன் தயாநிதி மாறன் அதிர்ந்தார் என்றால் முத­ல் சுதாரித்தது அ.தி.மு.க தான்.

தொகுதியின் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்க கூடிய முஸ்­ம் சமுதாயத் தின் ஓட்டுக்களை பெற்று ஹைதர் அலி வென்று விடுவாரே என்ற எண்ணத்தில் அ.தி.மு.க வேட்பாளர் எஸ்.எஸ். சந்திரன் மாற்றப்பட்டு மேன்சன் உரிமை யாளர் முஹம்மது அலி ஜின்னா நிறுத்தப்பட்டார். இது முஸ்லிம்களின் ஓட்டுக்களை பிரிக்க தயாநிதி சசிகலா மூலம் செய்த வேலை என்றும் ஒரு செய்தி உலா வருகிறது. இது ம.ம.கவுக்கு கிடைத்த முதல் வெற்றியாகத்தான் அரசியல் நோக்கர்களால் கருதப்படு கிறது.  வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வுடன் ஜமாத் சந்திப்பு, முக்கிய பிரமுகர் கள் சந்திப்பு, வீதி வீதியாக தேர்தல் பிரச் சாரம் என தமுமுக, மமக தொண்டர் களோடு, ஹைதர் அலி பம்பரமாக சுழன்று வருகிறார். கூட்டணி கட்சிகளின் தொண்டர்களும் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.

5 வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்தும் தொகுதிக்கு ஏதும் உருப்படியாக செய்யாதது தயாநிதிக்கு மைனஸ். மேலும் இலங்கை தமிழர் பிரச்சனையில் நாடகமாடி வரும் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தமிழ் அமைப்புகளின் பிரச்சாரம், வெகுஜன மக்களை, சிந்தனையாளர் களை தி.மு.கவுக்கு எதிராக சிந்திக்க வைத்திருக்கிறது. அ.தி.மு.கவை பொறுத்த வரை திமுகவுக்கு எதிரான வோட்டுக் களை பெறக் கூடிய அளவில் தகுதியான வேட்பாளர் இல்லாதது அ.தி.மு.க தொண்டர்களே யார் இவர் என்று கேட்க கூடிய நிலையும் முஸ்லிம் சமூக மத்தியில் துளியும் அறிமுகம் இல்லாததும் அ.தி.மு.க வேட்பாளரின் மைனஸ், தே.மு.தி.கவும் வேட்பாளரை அறிவித் துள்ளது மிகச் சிறுபான்மை சமுதாயமான மார்வாடி இனத்தை சேர்ந்தவர் ராம கிருஷ்ணன் தொகுதியில் சற்றும் அறி முகம் இல்லாதவர்.

இவையெல்லாம் ம.ம.க வேட்பாளர் ஹைதர் அலிக்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது. மேலும் தொகுதியில் இருக்கும் கிறிஸ்தவ, தலித் மக்களின் ஆதரவு மனித உரிமை அமைப்புகளின் ஆதரவு என பரவலாக தொகுதியில் ஆதரவை பெற்று தற்போது மத்திய சென்னையில் தயாநிதியா, ஹைதர் அலியா என்ற நிலை உருவாகி உள்ளது. தமிழகம் முழுவதும் திமுகவுக்கு ஆதர வாக சுற்றுப் பயணம் செய்ய இருந்த தயாநிதியை கலைஞரே ''நீ உன் தொகுதிய மட்டும் கவனமாக பார்'' என்று சொன்னதாக தகவல். இதனால் குடும்பத் தோடு தெருத் தெருவாக சுற்றி வருகிறார் தயாநிதி.
ரயில் என்ஜின் சின்னத்தை மக்களி டம் கொண்டு சென்று சேர்த்து விட்டால் ம.ம.க வேட்பாளர் ஹைதர் அலியின் வெற்றி உறுதிப்பட்டு விடும். தேர்தலுக்கு குறைவான நாட்களே உள்ளதால் மத்திய சென்னையில் கடும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் ஹைதர் அலி வெற்றிக் கனியை பறித்தெடுப்பார் என்பதே அனைவரின் கருத்தாக இருக்கிறது.